மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் - 2 பெண்கள் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், படூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து செல்லும் போது விபத்து நிகழ்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி சாலவாக்கம். இப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கல்குவாரி மற்றும் கல் அரவை நிலையங்கள் என 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு கல்குவாரிகள் அதிக அளவில் இப்பகுதியில் உள்ளது. இதில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமான மூலப் பொருட்கள் சென்னை புறநகர் பகுதி மட்டுமில்லாமல், அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து 24 மணி நேரமும் கனரக லாரிகளால் மூலம் பல்வேறு வழித்தடங்கள் வழியாக எடுத்து செல்லப்படுகிறது.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் பகுதியில் இருந்து, சாலவாக்கம் செல்லும் சாலை பிரிந்து செல்லும் சாலையில் இந்த வாகனங்கள் செல்வதால், சுற்றுச்சூழல் மட்டுமில்லாமல் வாகன விபத்திலும் பொதுமக்கள் சிக்கி உயிரிழந்தும் , உடல் உறுப்புகளை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ் வழித்தடத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளும் சொற்ப எண்ணிக்கையிலே செல்வதால் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது வழக்கம்.
இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து படூர் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று மாலை 4 மணி அளவில், உத்திரமேரூர் ஒன்றியம், அமராவதிப்பட்டினத்தை சேர்ந்த செல்வம், 41, என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். அரசு பேருந்து படூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சுமார் 20 பயணிகளுடன் பயணித்து வந்த நிலையில், சிறுமயிலூர் பகுதியில் நின்ற போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரி பேருந்து பக்கவாட்டில் உரசியபடியே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் , அரசு பேருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் , உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் இதை கண்டதும் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ், மூலம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படூர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றும் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புனிதா (51) என்பதும், மற்றொருவர் காஞ்சிபுரம் நகரில் வசித்து வரும் ரதி (21) என்பதும் தெரியவந்துள்ளது. விபத்துக் குறித்து சாலவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion