மேலும் அறிய

இந்துக்களுக்கான தனது பணிகள் தொடரும் - கனல் கண்ணன் உறுதி

அரசியல் சார்பான பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க கனல் கண்ணன் மறுத்துவிட்டார்.

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையான இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், இந்துக்களுக்கான தனது பணிகள் தொடரும் என உறுதியுடன் கூறினார்.
 
சென்னை மதுரவாயலில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது பெரியார் குறித்து கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கடந்த மாதம் 15ஆம் தேதி பாண்டிச்சேரியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து மாலை புழல் சிறையில் இருந்து இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  இந்து முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து கனல் கண்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்துக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன், போராடுவேன் என உறுதியாக தெரிவித்தார். மேலும் அரசியல் சார்பான பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க கனல் கண்ணன் மறுத்துவிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன், சுதந்திர தினத்தன்று கருத்துருமையை முடக்கும் வகையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கருத்துரிமை நசுக்கப்பட்டு வருவதாக சாடினார். இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக குற்றம் சாட்டிய இளங்கோவன், உடனே இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு மாறாக இந்துக்களுக்கு எதிராக  முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். இந்து முன்னணி பிரச்சனையை முன்னெடுக்கும் போது பிறர் துணைக்கு வருகிறார்களா என பார்க்காமல் இந்துக்களுக்கான பணிகளை தொடருவோம் என இளங்கோவன் தெரிவித்தார்.
 
முன்னதாக, ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோயிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  தேவையற்ற கருத்துகளை யூடியூப்-ல் பேசுவது ஃபேசனாகிவிட்டது என தெரிவித்ததுடன், ஒரு கட்சியில் இருக்கும்போது மாற்று கொள்கை உடையோர் குறித்து ஏன் பேச வேண்டும் என கனல் கண்ணனுக்கு கேள்வி எழுப்பினார்.
 
பின்னர் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், 4 வாரங்களுக்கு தினமும் காலையும், மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதித்துள்ளார்.
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
IPL 2026 MI vs KKR: டாஸை வென்ற மும்பை பவுலிங்! பேட்டிங்கில் பொளக்குமா கொல்கத்தா?
IPL 2026 MI vs KKR: டாஸை வென்ற மும்பை பவுலிங்! பேட்டிங்கில் பொளக்குமா கொல்கத்தா?
DMK Election Manifesto: தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
TVK Vijay Pledge: “இருமுனை போட்டிதான்“; “மக்கள் பணத்தை தொட மாட்டோம்“; வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்க வைத்த விஜய்
“இருமுனை போட்டிதான்“; “மக்கள் பணத்தை தொட மாட்டோம்“; வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்க வைத்த விஜய்
TVK Vijay: “ஒரு எம்எல்ஏ என்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா.?“; விஜய் கூறிய விளக்கம்; ஆர்ப்பரித்த நிர்வாகிகள்
“ஒரு எம்எல்ஏ என்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா.?“; விஜய் கூறிய விளக்கம்; ஆர்ப்பரித்த நிர்வாகிகள்
MS Dhoni: CSK-வுக்கு பலத்த அடி! ஐபிஎல் 2026-ல் இருந்து தோனி விலகலா? 'தல' ரசிகர்கள் அதிர்ச்சி
MS Dhoni: CSK-வுக்கு பலத்த அடி! ஐபிஎல் 2026-ல் இருந்து தோனி விலகலா? 'தல' ரசிகர்கள் அதிர்ச்சி
Embed widget