சென்னை: சாலையில் சிறுமியை முட்டித்தூக்கிய மாடு - போராடி மீட்ட பொதுமக்கள்: மாநகராட்சி ஆணையர் கொடுத்த உறுதி
J Radhakrishnan: சென்னையில் சிறுமியை முட்டிய மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது.
சென்னையில் சிறுமியை முட்டிய மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் பள்ளி முடிந்து தாயுடன் வீடு திரும்பி கொண்டிருந்த சிறுமியை சாலையில் வந்துக் கொண்டிருந்த பசுமாடு ஒன்று முட்டி தூக்கி வீசிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னை அரும்பாக்கத்தில் நேற்று மாலை மாடு முட்டியதில் சிறுமி ஒருவர் காயமடைந்தார். இது மிகவும் வேதனையானதுதான். அந்தச் சிறுமி தற்போது நலமுடன் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவருடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாடு பெரம்பூர் முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். மாட்டின் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் நலச் சங்கம் மாட்டு உரிமையாளருக்கு ஆதரவாக வந்தாலும்கூட இந்தச் சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் வலுவாக எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது?
மாடு ஒன்று சிறுமியை முட்டி தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. இது பேசுபொருளாகவும் மாறியது.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள இளங்கோ நகரில் நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுமி ஒருவர் தந்து தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கொண்டிருந்த மாடுகளில் ஒன்று திடீரென சிறுமியை முட்டி தூக்கி வீசியது. அந்தச் சிறுமி கதறினாள். அருகில் இருந்தவர்கள் பதறினர். எப்படி சிறுமியை காப்பாற்றுவது என்று தெரியாமல் தவிர்த்தனர். ஒரு வழியாக எப்படியோ நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அங்கிருந்து மாடுகளை விரட்டி சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாட்டு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடு சும்மா ஒரு ஓரமாக செல்லும்தானே என்று நினைத்தது இந்த வீடியோ மூலம் அனைவரையும் அதிச்சிக்குள்ளாகியுள்ளது. பலரும் மாடு உரிமையாளர்களை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.
சென்னை போன்ற நகர்புறங்களில் கால்நடைகள் வளர்ப்பது மிகவும் சாவாலான விசயமாகும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது. மீறினால் அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் கைப்பற்றும் சட்டம் இப்போது அமலில் உள்ளது. ஆனாலும், மக்கள் இதை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் கைப்பற்றப்பட்டு ரூ.2000 அபராதம் விதிப்படும். அதன்பிறகு, மாடுகளை உரிமையாளர்கள் அழைத்துச் செல்லலாம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்ட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..