மேலும் அறிய

SI மகளை காதலித்த இளைஞர் ஆணவக் கொலை: தமிழகத்தில் அதிர்ச்சி! காங்கிரஸ் கண்டனம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக கங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SI மகளை காதலித்த இளைஞர் 

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் (26) இவர் நெல்லையை சேர்ந்த எஸ்.ஐ தம்பதியின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள சித்த மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வரும் அந்த பெண்ணை கவின் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கவின் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் என்பதால் இவர்களது பழக்கம் பெண்ணின் சகோதரனுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில், கேடிசி நகரில் உள்ள மருத்துவமனைக்கு வந்த கவினை பெண்ணின் தம்பி சுர்ஜித் வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் , பாளையங்கோட்டை போலீசார் சுர்ஜித் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பணியில் இருந்து சஸ்பெண்ட்

கவின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சுர்ஜித் பெற்றோரான காவல் அதிகாரிகள் சரவணன், கிருஷ்ணகுமாரி இருவரும் இந்த கொலை வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இருவரையும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் ; 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் , வேதனையும் அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக தொடரும் தலித் மக்கள் மீதான ஆணவப் படுகொலை நவீன சமூகத்திலும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. அறிவிலும் அறிவியலிலும் வளர்ச்சி அடைந்த 2025 ஆம் ஆண்டுகளிலும் விளிம்பு நிலை மக்கள் மீது நிகழ்த்தப்படும் இது போன்ற கொலை சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது. 

அரசை தலை குனிய செய்கிறது

கொலையாளியின் பெற்றோர் காவல் துறை அதிகாரிகளாக இருந்து இந்த ஆணவக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அரசை தலை குனிய செய்கிறது. காதல், திருமணம், தனிநபர் உரிமை ஆகியவை அரசியல் சாசனத்தால் ஒவ்வொருவருக்கும்  வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.

ஒரே ஆண்டில் 7 ஆணவ படுகொலைகள்

விருதுநகர் அருப்புக்கோட்டையில் அழகேந்திரன், மதுரை திருமங்கலத்தில் திருமண தம்பதி, அவனியாபுரத்தில் கார்த்திக், ஈரோட்டில் சுபாஷ் என்பவரின் சகோதரி, சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் என தமிழகத்தில் ஆணவ படுகொலைகளின் பட்டியல் நீள்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஏழு ஆணவ படுகொலைகள் நடந்துள்ளதாக சட்டப்படியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியல் மேலும் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அரசு இரும்புக்கரம் கொண்டு இத்தகைய கொலை செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும், 2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆணவக் கொலை மற்றும் கும்பல் படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு இந்த சட்ட மசோதாவை இன்று வரை சட்டமாக்காமல் கிடப்பிலே போட்டுள்ளது. அதே போல் ஆணவக் கொலை வழக்கில் நீதிபதி ராமசுப்பிரமணியம்  வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டை ஒழிக்க நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை பள்ளி கல்லூரிகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி அறிவியல் உள்ளிட்ட பல வகைகளிலும் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் ஆணவ படுகொலைகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget