பெற்றோருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
சென்னை பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியின் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் சோதனை
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொத்தேரி அருகே போதைப்பொருட்கள் தொடர்பாக மாணவர்கள் தங்கி இருந்த வீடுகளில் சோதனைகள் நடைபெற்றது. இது தொடர்பாக மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்ற வழக்கு பிரபல ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திடீரென தற்கொலை முயற்சி
இந்தநிலையில் பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த கொண்ட சீனிவாச நிகில் (20) தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்தவர் வருகிறார்.
பொத்தேரி அருகே உள்ள கக்கன் கருவில் அபெளட் வேலி என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நீக்கில் தனது நண்பர்களான ஜெயந்த் மற்றும் சாக்ஷி ஆகியோருடன் தனது அறையில் இருக்கும் பொழுது நேற்று இரவு , செல்போனில் தனது பெற்றோர்களிடம் பேசிவிட்டு நாலாவது மாடியில் உள்ள தனது அறையில் உள்ள பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.
பெற்றோருடன் செல்போனில் உரையாடல்
உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவரை அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் மீட்டு அருகே இருந்த, ஆட்டோவின் உதவியுடன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவருடைய பெற்றோரை, திங்கட்கிழமை கல்லூரிக்கு வர சொன்னதாகவும், அது சம்பந்தமாக மாணவர் தனது பெற்றோருடன் பேசிவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்கொலைக்கு காரணம் என்ன ? என்பது தொடர்பான விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2
464 0050, +91 44 2464 0060)