மேலும் அறிய
Advertisement
உத்திரமேரூர் அருகே ஏரிக்கரைகளில் 3000 பனை விதை நடும் விழா...!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த பெருங்கோழி கிராமத்தில் பருகோபிரண்ட்ஸ் சோசியல் டீம் என்கிற இளைஞர்கள் குழு சார்பில் மூவாயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த பருத்திக் கொள்ளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பருகோபிரண்ட்ஸ் சோசியல் டீம் என்கிற அமைப்பை துவங்கி 2003 ஆம் ஆண்டு முதல் மரம் நடுதல் மற்றும் மழைக்காலங்களில் ஏரிக்கரைகளில் பனை விதை நடுதல் உள்ளிட்ட சூழலியல் சார்ந்த நற்பணிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று உத்திரமேரூர் அருகில் உள்ள பெருங்கோழி கிராம பெரிய ஏரிக்கரையில் இருபுறமும் சுமார் மூவாயிரம் பனை விதைகளை இரண்டரை அடிக்கு ஒன்று வீதம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என 20க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி நட்டனர்.
இவ்விழாவை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் துவங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டின் மரமாகவும் ஏரிக்கரையின் மண் அரிப்பை தடுத்து சிறந்த நீர்ப்பிடிப்பு செய்து நீர்த்தேக்கங்களில் நீரை சேமித்து உதவக்கூடிய பணியையும் பனைமரம் மேற்கொள்கிறது. மேலும் பனைமரத்தின் அனைத்து உறுப்புகளும் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகின்றன குறிப்பாக கடந்த கால வரலாறுகளை இலக்கியங்களை எழுத்து வடிவமாக பனை ஓலை சுவடி மூலம் எழுதி பாதுகாக்கப்பட்டது. மேலும் பல்வேறு சிறப்பு வாய்ந்து தமிழகத்தின் அடையாளமாக திகழ்ந்து வரும் இந்த பனை மரங்களை தொடர்ந்து பல்வேறு கிராம ஏரிக்கரைகளில் நட இவ்வமைப்பினர் திட்டமிட்டுள்ளார்கள் .
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் துரைபாபு அவர்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஏராளமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் கூறுகையில், தமிழகத்தில் அதிகளவு இருந்த பனை மரம் தற்பொழுது வேகமாக வெட்டப்பட்டு வரும் காரணத்தினால், பனை மரங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. பனை மரம் என்பது சாதாரண மரம் கிடையாது அது கடவுள் கொடுத்த வரம். பனை மரத்தை போற்றி பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.
தற்போது தமிழக அரசு சார்பில் பனை மரத்தை வெட்டக்கூடாது, வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வேண்டும் என கூறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் தமிழக அரசு சார்பில் பனை மரத்தில் கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்ட உதவி செய்ய வேண்டும். அவ்வாறு பனை மரத்தில் கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் பொழுது பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இளைஞர்கள் தங்களுடைய பகுதிகளில் தன்னார்வலர்கள் முன்வந்து பனை மர விதைகளை நட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
விக்ராந்த் முதல் விஜயலட்சுமி வரை..அர்ஜூனின் SURVIVOR SHOWவின் நட்சத்திர பட்டியல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion