மேலும் அறிய
Advertisement
குரங்குகளை விஷம் வைத்துக்கொன்று பாலாற்றில் வீசிச்சென்ற மிருகங்கள்..!
மதுராந்தகம் அருகே விஷம் வைத்து குரங்குகளை கொன்று பாலாற்றில் வீசி சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் பாலாற்று படுகையில் 7 குரங்குகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்குகளுக்கு உணவில் விஷம் வைத்து கொன்று அடையாளம் தெரியாத நபர்கள் பாலாற்றில் வீசி சென்றுள்ளனர். பாலாற்று வழியாக மீன் வியாபாரம் செய்ய வந்தவர்கள் குரங்குகள் விசித்திரமாக சுற்றி திரிவதை கண்டுள்ளனர், மேலும் சில குரங்குகள், ஆங்காங்கே இறந்து விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர். குரங்குகள் உயிருக்கு போராடி இருந்ததை பார்த்து வனத்துறையினர்க்கு தகவல் தெரியபடுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த 7 குரங்குளை மீட்டு பிரோத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்போது அந்த இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குட்டி குரங்கு ஒன்றை மீட்டு தற்போது குரங்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாமண்டூர் அருகே பாலாற்று பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குரங்குகளுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றது யார். குரங்குகளை கொன்று பாலாற்றி வீசி சென்றது யார் என வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், உயிரிழந்துள்ள குரங்குகளை பார்க்கும்போது அவை இப்பகுதியை சேர்ந்த குரங்குகள் போல் தெரியவில்லை. வேறொரு இடத்தில் இருந்து விஷம் வைத்து கொலை செய்து விட்டு, இவ்விடத்தில் கொண்டு வந்து போடப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குரங்குகளின் உயிரிழப்பு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்த குரங்குகளை பிரேத பரிசோதனை செய்த பிறகே உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பதை உறுதி செய்ய முடியும் என தெரிவித்தனர்.
முன்னதாக இதேபோல் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே பேகூர் கிராஸ் ரோட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி 60 குரங்குகள் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தன. குரங்குகளை விஷம் வைத்து கொன்றதாக ஹாசன் மாவட்டம் அருகே உகனி, கேதனஹள்ளியில் வசித்து வரும் ராமு, யசோதா, மஞ்சு, ராஜேகவுடா, ராமானுஜம் ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion