Two inmates Married : மனநலக் காப்பகத்தில் காதல் திருமணம்... 200 ஆண்டு வரலாற்றில் இது முதல்முறை!
சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் வார்டில் இருந்து "ஹாஃப் வே ஹோம்" என்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையான சென்னையில் இருக்கும் மனநலக் கழகத்தில் உள்நோயாளிகள் இருவருக்கு அக்டோபர் 28ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மனநலக் கழகத்தின் 228 ஆண்டுகால வரலாற்றில் நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவருக்கு திருமணம் முடிக்கப்படுவது இதுவே முதல்முறை.
வெளியிடப்பட்ட செய்தியின்படி, உள்நோயாளிகளான 42 வயதான பி மகேந்திரன் மற்றும் 36 வயதான தீபா இருவரும் வருகின்ற 28 அக்டோபர் அன்று மணம் முடிக்க உள்ளனர். தற்போது, மகேந்திரன் வளாகத்தில் உள்ள ஒரு தினப்பராமரிப்பு மையத்திலும், தீபா மருத்துவமனையில் தங்கி இருப்பவர்கள் நடத்தும் கஃபே ரிவிவிலும் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திலும் பணிபுரிகிறார்.
2016ம் ஆண்டில், தீபா தனது தந்தையின் மறைவை அடுத்து அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடந்த நிகழ்வுகளை செயலாக்க போராடிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே காலகட்டத்தில் குடும்ப சொத்துக்களுக்காக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டைக்குப் பிறகு மகேந்திரனும் அங்கே அனுமதிக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் வார்டில் இருந்து "ஹாஃப் வே ஹோம்" என்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். முழுமையான மீட்புப் பாதையில் உள்ள நபர்கள் இங்கே குடியமர்த்தப்படுவார்கள்.
இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய தீபா, "என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் முதலில் எப்போது என்னிடம் கூறினார் என்று எனக்கு நினைவில்லை. பின்னர் ஒருநாள், நான் வீட்டிற்குச் சென்றேன், மீண்டும் திரும்ப வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த நாட்களில்தான் அவர் எனக்குச் சரியான நபராக இருக்கலாம் என்பதை உணர்ந்தேன். அவரோடு வாழ்வது வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது" என்றார்.
இதற்கிடையில், மருத்துவமனை இயக்குனர் பூர்ணா சந்திரிகா கூறுகையில் அவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளை மீறி அவர்களுடைய காதல் வென்றுள்ளது. மேலும் மகேந்திரனை தான் ஏன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தீபா தன்னிடம் காரணத்தைப் பகிர்ந்ததையும் அவர் கூறினார்.
1794 இல் கிழக்கிந்திய நிறுவனத்தால் மனநோயால் பாதிக்கப்பட்ட 20 ஐரோப்பியர்களுக்குச் சிகிச்சை அளிக்க இந்த மனநல மருத்துவக் கழகம் நிறுவப்பட்டது. இந்த மனநல மருத்துவக் கழகம் இந்தியாவின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

