மேலும் அறிய
Advertisement
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு.. வட மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..
கல்குவாரி அமைய இருப்பதாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1. காஞ்சிபுரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது திராவிட முன்னேற்ற கழகம். அதேபோல் வேலூர் ,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பகுதிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
3. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடுகப்பட்டு பகுதியில் புதிய தார் தொழிற்சாலை மற்றும் கல்குவாரி அமைய இருப்பதாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. செங்கல்பட்டு அடுத்த பழவெளி அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மார்க்கமாக சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காரில் சென்றார் ஹீமாவர்ஸ் மற்றும் பாரதி ரெட்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழப்பு.
5. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு என நியமிக்கப்பட்டுள்ள ஆறு பறக்கும் படையினர், சுழற்சி முறையில், மாநகராட்சியின் எல்லை பகுதியில் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
6. விழுப்புரம் நாட்டு மக்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முக்கியம் என்பதை உணர்ந்து வேட்பாளர்கள் கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
7. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஒரு மாத ஆண் குழந்தையை கடத்த முயன்ற இருவரை ஆா்.பி.எஃப் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
8. கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
9. சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்
10. மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பை நிரூபிக்க 13 வயது சிறுமியை தீயிட்டுக் கொளுத்தச் சொல்ல, மனைவியும் கொளுத்தியதில் சிறுமி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion