மேலும் அறிய
Advertisement
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிய வேண்டிய செய்திகள்!
மழை, பள்ளிகளுக்கு விடுமுறை ,நிரம்பிய ஏரிகள் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பால் ஆற்று வெள்ளம் மற்றும் முகாம் காரணமாக இன்று 12 பள்ளிகளுக்கு விடுமுறை.
3. மாமல்லபுரத்தில் நேற்று கடலில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கரைப்பகுதி வரை 20 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உட்புகுந்ததால் கடற்கரை கோவிலுக்கு தெற்கு பக்க கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது.
4. செங்கல்பட்டு அருகே பாலாற்று மணல் திட்டில் சிக்கிக்கொண்ட 30 க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மணல்திட்டு இருக்கும் பகுதிக்கு போட்டுக்கள் மூலம் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
5. அச்சிறுப்பாக்கம் அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் பணம் மற்றும் நகைக்காக, உடன் பிறந்த சகோதரியை கொலை செய்து, நாடகமாடிய பாசக்கார தம்பியை, போலீசார் கைது செய்தனர்.
6. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. தாம்பரம் அருகே, மழையால் பாதிக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
8. சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை சீரமைக்க, வெளி மாவட்டங்களில் இருந்து 500 சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9. கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 1,132 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
10. திரு.வி.க., நகரில் தொடர் மின் தடை, குடிநீருடன் கழிவு நீர் கலப்பு, மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion