மேலும் அறிய
Advertisement
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்..
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய நிகழ்வுகள்.
1. தொடந்து பெய்து வரும் பலத்த மழையால் திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 30) விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
2. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியா்கள் மா.ஆா்த்தி (காஞ்சிபுரம்), ராகுல்நாத் (செங்கல்பட்டு) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
3. ஐந்தாவது நாளாக ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் தண்ணீர் வற்றாது நிலை தொடர்கிறது.
4. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம், முடிச்சூா் பகுதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
5. வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோந்த தேவேந்திரன், துணைத் தலைவராக சேகா் ஆகியோா்
தோவு செய்யப்பட்டனா்.
6. காஞ்சிபுரம் சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரணை அறிக்கை தர ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இளநிலை உதவியாளர் கைது. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
7. தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மீன் குத்தCகைக்குத் தன்னிச்சையாக விடுவது சட்ட விரோதமானது எனத் தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் எச்சரித்துள்ளார்.
8. சென்னையில் உள்ள பொன்னேரி பகுதி, பூந்தமல்லி வடக்குப் பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 4 மணிக்குள் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல் பூந்தமல்லி வடக்குப் பகுதியில் உள்ள காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி ஆகிய பகுதிகளிலும், பொன்னேரி பகுதியை சுற்றியுள்ள திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
9. தமிழகத்தில் மழையின் போது, டெங்கு காய்ச்சலால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
10. ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம் ராணுவ நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை எட்டு வாரத்தில் அகற்றி நிலத்தை ஒப்படைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion