மேலும் அறிய
Advertisement
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய நிகழ்வுகள்
பள்ளிகளுக்கு விடுமுறை, ஆற்று வெள்ளத்தில் கிடைத்த சிலை உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று(26.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
2. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
3. பாலாற்று வெள்ளத்தில் கிடைத்த ஹயக்ரீவர் சிலையை காஞ்சிபுரம் வட்டாட்சியர் லட்சுமி தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
4. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. மீண்டும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
5. தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, சுகாதாரத் துறை அதிகாரிகள் உதவியுடன், போலீசார் கைது செய்தனர். தடுப்பூசி போடும்போது சிக்கினார்.
6. சென்னை மாதவரம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதிய விபத்தில், இரு சக்க வாகனத்தில் சென்றவர்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்தனர்.
7. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்கு வீடுகளை விற்றுத் தருவதாக, 2.47 கோடி ரூபாய் மோசடி செய்த பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.
8. முனைவர் பட்டப்படிப்பு படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை, 1 லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
9. அபாயகரமாக ரயிலில் சாகசம் செய்த பள்ளி மாணர் , மாணவியை அவர்களின் பெற்றோர்களுடன் அழைத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
10. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் இருந்து இதுவரை 18.5 டிஎம்சிஉபரிநீர் வெளியேற்றப்பட்டு , கடலில் கலந்துள்ளது .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion