மேலும் அறிய
Advertisement
Rameshbabu Praggnanandhaa : வெற்றி குறிக்கோள் அல்ல.. இதுதான் எனது லட்சியம்.. அசரவைத்த செஸ் க்ராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா..
போட்டியில் வெற்றி குறிக்கோளை கொண்டு செயல்படுவதில்லை எனவும், தனது திறமையை வெளிப்படுத்துவது வெற்றி ஆகிறது என செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா காஞ்சியில் பேட்டியளித்துள்ளார்.
உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி வரும் ஜீலை 28ல் துவங்கி ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எட்டாவது தேசிய யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா காஞ்சிபுரம் வருகை புரிந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின் காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையாக இருந்த காமாட்சி அம்மன் தரிசனம் தற்போது மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்தது இப்போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக செஸ் போர்டு வாரியத்திற்கும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும்” தெரிவித்தார்.
மேலும் நான் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஒருபோதும் போட்டியின்போது வெற்றி எனும் நோக்கில் செயல்படாமல் தனது திறமையை வெளிப்படுத்துவதில் வெற்றி கிடைக்கிறது என தெரிவித்தார். கோயிலுக்கு வந்த செஸ் மஸ்டர் பிரக்ஞானந்தா விற்கு கோயில் நிர்வாகம் சார்பில் காமாட்சி அம்மன் திரு உருவப்படம் அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது அவரது தாயார் நாகலட்சுமி, பயிற்சியாளர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
AIADMK Meeting : களைக்கட்டும் அதிமுக பொதுக்குழு! முன்னேற்பாடுகள் என்னென்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Crime : நள்ளிரவு பூஜை.. நாகதோஷம்.. பகீர் திட்டம்.. கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion