மேலும் அறிய
Advertisement
ஜி - 20 மாநாடு பாதுகாப்பு ஆய்வு...! விசா இல்லாத 16 பேரை கைது - போலீஸ் அதிரடி
வங்காளதேசத்தில் இருந்து படகு மூலம் தமிழகம் வந்த 16 பேர் மீது வழக்கு பதிவு கேளம்பாக்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை
சென்னை ஒட்டியுள்ள கோவளத்தில் (5 star hotel) 5-நட்சத்திர ஓட்டலில் அடுத்த மாதம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லையில் வசிக்கும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்து போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கேளம்பாக்கம் அருகே படூர் பகுதியில் சாலையோரத்தில் தங்கி இருந்த 16 நபர்களை கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை பிடித்து கேளம்பாக்கம் போலீசார் விராசனையில் இடுபட்டனர். ஆனால் அவர்கள் இந்தி பேசியதால், கேளம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்போது 16 நபர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற எந்த அரசு அடையாளங்களும் இல்லாதது தெரிய வந்தது. இந்நிலையில் 16 நபர்கள் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேளம்பாக்கம் சமுதாய கூட்டத்தில் அமர வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் எப்படி இந்தியா வந்தார்கள் எந்த வழியாக தமிழகம் வந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஸ்போர்ட் இல்லாமலும், குடியுரிமைக்கான எந்தர் ஆதாரமும் இல்லாமலும் தமிழகத்தில் தங்கி இருந்தது குறித்து சட்டவிரோதம் ஆனது என்ற அடிப்படையில் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்களை எதற்காக தமிழகம் வந்தார்கள் என்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1.முகமது பைசுல் வயது-42,
2.முகமது நஷ்முல் வயது-38,
3, முகமது ஜமால் வயது-44,
4, எலால் வயது-25,
5, பர்ஷாகான் வயது-38
6, பிலால் வயது -20,
7, சுல்தான் பாரஜி வயது-26,
8, ரெஜாகுல் வயது- 29,
9,அமிநுல் M/38,
10, முகமது சலிம் M/45,
11, ஷாரிக் M/26,
12,சுகல் M/30,
13,அசான் M/27,
14,சுலாஸ் M/30,
15, அசான் ஷேக் M/20,
16, மாசூம் M/35,
உள்ளிட்ட 16 பேரும் பங்களா தேஷ் கொல்னா மாவட்டம், பிரிஸ்பூர் மாவட்டம், கொலாலூர் மாவட்டம், சிட்டா கான் மாவட்டம், சுனாம் காஞ் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது. இவர்கள் அனைவரும் படகு மூல் கலகத்தா வந்து அங்கிருந்து தமிழகம் வந்துள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று யாரேனும் இருக்கிறார்களா என்று போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குடியிரிமை சட்டம், பாஸ்போட் இல்லாதது, கேளம்பாக்கம் காவல் நிலைய குற்ற வழக்கு எண்.3/2023.U/S.12(c),of passport act 1967,14,A(b) of forine res act 1946 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion