மேலும் அறிய
Advertisement
Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. தல தோனி பங்கேற்கவில்லையா? என்னென்ன சிறப்பம்சங்கள் ?
செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா இன்று நடைபெற உள்ளது.
சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் 44வது செஸ் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. துவக்க விழாவில் பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் வெளிநாட்டவரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரவேற்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. துவக்க விழாவில், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன், இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செஸ் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் குரலில், தமிழர் வரலாறு குறித்த ஆடியோ பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்றவாறு கலைஞர்கள் பெர்ஃபார்ம் செய்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு சதுரங்க கீதம் பாடலையும் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதுபோக துவக்க விழாவில் வருகை புரிந்து இருந்த வெளிநாட்டினர் வழிகாட்டுவதற்கு அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தனர். வித்தியாசமான முறையிலும் புதுமையான முறையில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது வெளிநாட்டு வீரர்களையே கவர்ந்திருந்தது.
12 நாட்கள் நடைபெற்ற வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா இன்று, மாலை 6 மணிக்கு விழா தொடங்குகிறது. முதலில் மாலை துவங்கும் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் மற்றும் இந்தியாவை சேர்த்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இதில் நடைபெற உள்ளது. கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் கண்கவர் நிகழ்ச்சியாக நிறைவு விழா நிகழ்ச்சி அமையும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்களுடன் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கிய போது.,
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) August 8, 2022
2/2 pic.twitter.com/76X4t7G0yK
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணங்களால், அவர் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள 44வது #ChessOlympiad2022 போட்டித் தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளுக்காக தயாராகி வரும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) August 8, 2022
1/2 pic.twitter.com/u7CSVlcyRk
உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அமைச்சர்கள் மையநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதுபோக வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நேரு விளையாட்டரங்கில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 12 நாட்களாக நடைபெற்று வந்த கொண்டாட்டம் இன்றுடன் முடிவடைகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion