மேலும் அறிய

Kanchipuram : பனிமூட்டத்தால் மலை பிரதேசங்கள் போன்று காட்சியளித்த சென்னை, காஞ்சிபுரம்.. வைரலாகும் படங்கள்..

காஞ்சிபுரம் மாநகர பகுதிகளிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பொன்னேரிக்கரை,சுங்குவார்சத்திரம்,உத்திரமேரூர்,ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களிலும் பனிமூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவம் தொடங்கிய சில நாட்கள் மழைபொழிவானது காணப்பட்டது. பின்னர் மீண்டும் சில தினங்கள் வெயில் காணப்பட்டு வந்த நிலையில் பருவமழை முடிவடைவதையொட்டி கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பொழிவானதை காணப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் மழைப்பொழிவானது ஓய்ந்திருக்கிறது.

Kanchipuram : பனிமூட்டத்தால் மலை பிரதேசங்கள் போன்று காட்சியளித்த சென்னை, காஞ்சிபுரம்.. வைரலாகும் படங்கள்..
 
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பனிப்பொழிவானது காணப்பட்டு காஞ்சிபுரம் மாநகர பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுமே பனிமூட்டத்துடன்‌ காணமுடிந்தது.மேலும் இந்த பனிமூட்டத்தால் மலைப்பிரதேசங்கள் போன்று ரம்மியமாக காட்சியளித்தது. அதே போல் இப்பனிமூட்டத்தினால் புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் கோபுரமானது பனிமூட்டத்தில் மூழ்கியது.

Kanchipuram : பனிமூட்டத்தால் மலை பிரதேசங்கள் போன்று காட்சியளித்த சென்னை, காஞ்சிபுரம்.. வைரலாகும் படங்கள்..
இந்த பனிப்பொழிவினால் அதிகாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வோர்,சென்னை போன்ற இடங்களுக்கு செல்ல இரயில்வே நிலையத்தில் காத்திருந்த ரயில் பயணிகள் போன்ற உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கார்த்திகை மாதத்தை காஞ்சிக்கு வருகை தந்துள்ள ஐயப்ப பக்தர்களும் கடும் அவதியடைந்தனர்.
 
மதுராந்தகத்தில் காலை 6 மணிக்கு மேல் கொட்டி தீர்க்கும் கடும் பணிப்பொழிவு, வாகன ஓட்டிகளும் நடைபயிற்சி மேற்கொள்பவரும் கடும் அவதி அடைந்தனர்
 
 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 6.00 முதல் கடும் பனிபொழிவு காணப்பட்டது. எதிரே வரும் வாகனம் மற்றும் ஆட்கள் தெரியாத அளவில் பனிபொழிவு ஏற்பட்ட உள்ளது இதனால் வாகன ஓட்டிகளும் நடைபயிற்சி மேற்கோள்பவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
 
Kanchipuram : பனிமூட்டத்தால் மலை பிரதேசங்கள் போன்று காட்சியளித்த சென்னை, காஞ்சிபுரம்.. வைரலாகும் படங்கள்..

காற்றழுத்த தாழ்வு பகுதி

கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகு உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 14.12.2022: தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  14.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

பாரூர் (கிருஷ்ணகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), காஞ்சிபுரம்  தலா 9, கறம்பக்குடி (புதுக்கோட்டை), செய்யூர் (செங்கல்பட்டு), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 8, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 7, மரக்காணம் (விழுப்புரம்), செங்கல்பட்டு, விழுப்புரம்,, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஆவடி (திருவள்ளூர்) தலா 6, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பூண்டி (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), திருக்கழுகுன்றம் (தஞ்சாவூர்), அரியலூர்,  கேவிகே காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை), கிருஷ்ணகிரி, கொள்ளிடம் (மயிலாடுதுறை), கடலூர் (கடலூர்), தொழுதூர் (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 5 மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

14.12.2022:  லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.12.2022 & 16.12.2022: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Breaking News LIVE 1st OCT 2024: 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Breaking News LIVE 1st OCT 2024: 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Embed widget