மேலும் அறிய
Advertisement
kanchipuram: தமிழ்நாட்டில் முதல்முறையாக காஞ்சி நியாயவிலை கடைகளில் பணம் செலுத்த QR கோடு அறிமுகம்
நீதிமன்ற உத்தரவின் படி 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் பேட்டி
முதற்கட்டமாக 6,500 கூட்டுறவு சங்கங்களில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் பதவி காலம் நிறைவடைந்துவிட்டது, நிறைவடைந்த சங்கங்களுக்கு சிறப்பு செயலாளர்கள் நியமன செய்ய உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் படி 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில், முதல் முறையாக நியாய விலை கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு பொதுமக்கள் பணவர்த்தனை செய்ய க்யூ ஆர் கோடு மூலம் பணத்தை செலுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள M.VM.P நியாய விலை கடையில் க்யூ ஆர் கோடு மூலம் பணவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்தார்.
நேற்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 நியாய விலை கடை, 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 7 நகர கூட்டுறவு சங்கம், 10 மருந்தகங்கள் என்ன கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் க்யூ ஆர் கோடு மூலமாக பண பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தினை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருள்களுக்கு நேரடியாக பணங்கள் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக க்யூ ஆர் கோடு பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
பின் செய்தியாளரை சந்தித்த கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம்,
தமிழகத்தில் 22 ஆயிரம் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்தும் பணி நடைபெற உள்ளது, முதற்கட்டமாக 6,500 கூட்டுறவு சங்கங்களில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் பதவி காலம் நிறைவடைந்துவிட்டது, நிறைவடைந்த சங்கங்களுக்கு சிறப்பு செயலாளர்கள் கொண்டு வர உள்ளோம். தற்போது தேர்தல் நடத்துவதற்காக இரண்டு வழக்கு உள்ளதால் நீதிபதி உத்தரவின் பெயரில் ஆறு மாதங்களில் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உடன் வாக்காளர் பட்டியல் பெறப்பட்டு உறுப்பினர்கள் உள்ளவர்கள், மறைந்த உறுப்பினர்களை நீக்குவது போன்ற வரையறைகளை முடித்த பின் 6 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் பேட்டி அளித்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கூடுதல் பதிவாளர் முருகன் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion