மேலும் அறிய
சென்னை : அண்ணா சாலை தனியார் கட்டிட வளாகத்தில் தீ விபத்து..
சென்னை, அண்ணா சாலையில் உள்ள தனியார் கட்டிட வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாசாலையில்_தீ_விபத்து_ஏற்பட்ட_கட்டிடம்
சென்னையின் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்று அண்ணாசாலை. எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் பெரும்பாலானவை மிகவும் பழமையானவை. இந்த நிலையில், இன்று காலை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்து தற்போது கரும்புகைகள் வெளிவந்து கொண்டிருப்பதால் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீயணைப்புக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் தெரியவில்லை. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















