கனமழை காரணமாக கிராமத்தின் சாலைகள் துண்டிப்பு: மக்கள் அவதி!
ஆரணி அருகே கனமழை காரணமாக ஏரி நீர் நிரம்பியதால் கிராமத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கபட்டன.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலையடிவார கிராமங்களில் உள்ள ஆறுகள், தடுப்பணைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் போளுர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியிலுள்ள சிறிய மலைகளில் இருந்து ஆறுகள், ஓடுகள் உருவாகி, நாகநதி ஆற்றில் இணைகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையில் ஆறுகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்து 2நாட்களுக்கு ரெட் அலார்ட் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளன. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள சுமார் 35ஏரிகள் கனமழைக்கு நிரம்பியுள்ளதாக பொதுப்பணி துறை அறிவித்த நிலையில் ஆரணி அருகே உள்ள பனையூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி இந்த ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த ஏரி மூலமாகதான் விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும் ஜவ்வாதுமலை அடிவாரத்திலிருந்து உருவாகி வரும் வெள்ளாற்றில் கண்ணமங்கலம், கீழ்நகர், குன்னத்துர், கொண்டம் தடுப்பனையிலிருந்து ஆரணி கமண்டலநாகநதி ஆற்று வழியாக பையூர் ஏரிக்கு சென்று அடைகிறது. அதன் பின்னர் கனிகிலுப்பை ஏரி மூலம் பனையூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கு நீர்வரத்து சென்று செய்யாற்றில் கலக்குவது வழக்கம்.மேலும் தற்போது ஆரணி சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருகின்றன. இதில் பனையூர் ஊராட்சிக்குபட்ட வடக்குமேடு ஓட்டதாங்கல் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து வடக்கு மேடு கிராம வழியாக பெரிய ஏரி அருகே உள்ள சாலையை கடந்து வரவேண்டிய நிலை உள்ளன.
ஆனால் தற்போது ஏரி நிரம்பியதால் சாலையில் சுமார் 4 அடி தண்ணீர் செல்வதால் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சிரமத்துக்கு உள்ளாயி வருகின்றனர். மேலும் அந்த கிராமத்தில் வாழும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கும் வடக்குமேடு கிராமத்திற்கு செல்ல முடியாமல் கிராம பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் எந்தவித அடிப்படை வசதியும் செய்யவில்லை என்றும், இதுபோன்ற சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதை நாங்கள் பஞ்சாயத்து மூலமாகவும் பின்னர் தாசில்தாரிடமும் தொலைபேசியில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பேசினாலும் அலட்சியம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இதுவரையில் எந்த ஓரு நவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர்.