மேலும் அறிய
Advertisement
Chennai Airport: சென்னை மழையால் தாமதமான விமானங்கள்; வானில் வட்டமடித்து தத்தளிப்பு
4 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமாகி பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
சென்னையில் நள்ளிரவு திடீர் மழை காரணமாக, விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்தன. ஒரு விமானம் பெங்களூருக்கு திரும்பியது. 4 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமாகி பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
பலத்த சூறைக்காற்று
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து, 342 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு, 12:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன், இடி மின்னல் மழை பெய்ததால், விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல், வானில் தத்தளித்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினார்கள்.
ஒன்றன் பின் ஒன்றாக
அதை போல் பாரீசில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் பிரான்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து 269 பயணிகளுடன் சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் திருச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தறையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்துக் கொண்டு இருந்தன. ஆனால் சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தும், வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த 4 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக, சென்னையில் தறையிறங்கின. அததோடு பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 2:50 8 மணிக்கு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது.
தாமதமாக புறப்பட்டு சென்றன
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பாங்க்காக், ஹாங்காங், சிங்கப்பூர், பாரீஸ், ஃபிராங்க்பார்ட், இலங்கை உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion