மேலும் அறிய

பள்ளி செல்லாத, இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று பள்ளிகளில் சேர்க்க உத்தரவு!

18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதாவது, 0-18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ / மாணவியர்கள்‌ மற்றும் 6-18 வயது வரையுள்ள இடை நின்ற மாற்றுத்‌ திறன்‌ மாணவ மாணவியர்கள்‌, புலம்‌ பெயர்த்‌ தொழிலாளர்களின்‌ குழந்தைகளைக் கண்டறிந்து, பதிவேடுகளைப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, உள்ளக்கிய கல்வி திட்டத்தின்‌ கீழ்‌, பிறப்பு முதல்‌ 18 வயது வரையுள்ள மாற்றுத்‌ திறன்‌ மாணவ மாணவியர்கள்‌ மழலையர்‌ பள்ளி, பள்ளி ஆயத்தப்‌ பயிற்சி, பள்ளி, மற்றும்‌ வீட்டு வழிக்‌ கல்வி மூலம்‌ பயனடைந்து வருகின்றனர்‌. ஒவ்வொரு ஆண்டும்‌, 6 முதல்‌ 18 வயது வரையுள்ள பள்ளி செல்லா மற்றும்‌ புலம்‌ பெயர்‌ தொழிலாளர்களின்‌, மாற்றுத்‌ திறன்‌ குழந்தைகளை கண்டறியும்‌ வகையில்‌ வருடத்திற்கு மூன்று முறை, ஏப்ரல்‌-மே, செப்டம்பர்‌ மற்றும்‌ ஜனவரி மாதங்களில்‌ நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில்‌, 2022-23 ஆம்‌ கல்வியாண்டில்‌, பின்வரும்‌ நெறிமுறைகளை பின்பற்றி, மாற்றுத்‌ திறன்‌ குழந்தைகளை குடியிருப்பு வாரியாக சென்று கண்டறிந்து, அவர்களை பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில்‌ மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின்‌ இயலாமை நிலையை பொருத்து, அருகாமையில்‌ உள்ள பள்ளிகளில்‌ சேர்த்து, இடை நிற்றலை தடுத்து இடைநிலை மற்றும்‌ மேல்நிலைக்‌ கல்வியை தொடரும்‌ வகையில்‌ செய்யவும்‌, பள்ளியில்‌ சேர்க்கவும்‌, பதிவேட்டினை புதுப்பிக்கவும்‌ அறிவுறுத்தப்படுகிறது.

1. அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள மாவட்ட மற்றும்‌ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள்‌, தலைமையாசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌, சிறப்பு பயிற்றுநர்கள்‌, இயன்முறை பயிற்றுநர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ தொடர்புடைய மற்ற அலுவலர்கள்‌ சேர்ந்த குழு கணக்கெடுப்பு மற்றும்‌ பதிவேடு புதுப்பித்தல்‌ பணியினை செய்து முடிக்க வேண்டும்‌.

2. மேலும்‌, பள்ளி செல்லா மற்றும்‌ இடைநின்ற குழந்தைகளை கண்டறிவது எப்படி?

பின்வரும்‌ மாணவ மாணவிகள்‌ பள்ளி செல்லா மற்றும்‌ இடை நின்ற மாணவ மாணவிகளாக கருதப்படுவர்‌.

தொடர்ந்து 30 நாட்கள்‌ பள்ளிக்கு வராமல்‌ இருத்தல்
அடிக்கடி பள்ளிக்கு வராமல்‌ இருத்தல்‌,
பள்ளியே செல்லாதவர்கள்‌, 
எட்டாம்‌ வகுப்பு முடித்து இடை நிற்பவர்கள்‌,

மேற்கூறப்பட்டுள்ள அனைவரும்‌ பள்ளி செல்லா மற்றும்‌ இடை நின்ற குழந்தைகள்‌ எனக் கருதப்படுவார்கள்‌. இம்‌மாற்றுத்‌ திறன்‌ மாணவ மாணவியர்களை கண்டறிந்து, அருகாமையில்‌ உள்ள பள்ளியில்‌ சேர்த்து, பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில்‌ மூன்று மாதங்களுக்குப் பயிற்சியளித்து, பின்னர்‌ அவர்களின்‌ இயலாமை அளவினைப் பொருத்து, பள்ளி, வீட்டு வழிக்‌ கல்வி என மாணவர்கள்‌ கல்வி கற்க ஏற்பாடு செய்தல்‌ வேண்டும்‌.

இக்குழந்தைகளை கண்டறிய பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மொபைல் செயலியைப் பயன்படுத்தி, அவரவர்களுக்கென (ஆசிரியர்‌, ஆசிரியப் பயிற்றுநர்கள்‌) அளிக்கப்பட்டுள்ள லாகின் ஐடி மூலம்‌ தரவு உள்ளீடு செய்ய அறிவுறுத்தவும்‌, உள்ளீடு செய்யப்பட்டுள்ள விவரங்களில்‌, மாற்றுத்‌ திறன்‌ கொண்ட குழந்தைகளின்‌ விவரங்களின்‌ படி, அவர்கள் பள்ளிகளில்‌ முறையாக சேர்க்கப்படுவதை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ உறுதி செய்யவும்‌, பள்ளி செல்லா மற்றும்‌ இடை நின்ற மாற்றுத்‌ திறன்‌ மாணவ மாணவியர்கள்‌, கல்வியினை தடையில்லாமல்‌ தொடர வழிவகை செய்யவும்‌ அறிவறுத்தப்படுகிறது’’.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: KG Admission: அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget