மேலும் அறிய
Advertisement
தேவர் ஜெயந்தி விழாவில் அஞ்சலி செலுத்தி நெகிழ்ச்சி ஏற்படுத்திய ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணியர்
செருப்பை கழட்டி விட்டு பயபக்தியுடன் மேடை ஏறி அஞ்சலி செலுத்தி நாகரீகத்தை உணர்த்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் வரும் நிலையில் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஆகியவை நடைபெறும். அவர் பிறந்த பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முக்குலத்தோர் சமுதாய மக்கள் தங்கள் குலதெய்வ கோயிலாக கருதி வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் பசும்பொன்னுக்கு வருகை தருவார்கள். அதன்படி, நேற்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் இருக்கும் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச் செயலாளர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டும், தேவர் குரு பூஜையை முன்னிட்டும் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் அருகில் தேவர் குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியர் கிறிஸ்டைன் (வயது23), ஷோபியா(வயது20) நண்பர்களான இருவரும் அங்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ள இருவரும் அவ்வழியாக நடந்து சென்றபோது தேவர் ஜெயந்தி விழா பற்றி அங்கு நின்றிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு திடீரென மேடை ஏறிய இருவரும் கடல் கடந்து வந்திருந்தாலும் சாதி, மதம், மொழி கடந்து தேவர் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு விழாக்குழுவினர் இனிப்பு வழங்கினர். அதனை வாங்கி ருசித்து சாப்பிட்ட இருவரும் விழா முடியும் வரை அங்கேயே 1 மணி நேரம் வரை நின்று பார்த்துவிட்டு, மேடையின் முன்பு ஆர்வமாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டு, முத்துராமலிங்க தேவரின் வரலாற்று தகவல்களை அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். முன்னதாக மேடை ஏறிய ஜெர்மன் நாட்டு நண்பர்கள் இருவரும் நம் இந்திய கலாச்சாரத்தை மதிக்கின்ற வகையில் காலில் மாட்டிருந்த செருப்பை ரோட்டில் கழட்டிவிட்டு மேடை ஏறி அஞ்சலி செலுத்தி சபை நாகரீகத்தை உணர்த்தியதை கூர்ந்து கவனித்து பலரும் அவர்களை (ஜெர்மன் பயணிகள்) பாராட்டியதை காண முடிந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion