மேலும் அறிய

Cyclone Asani Live: அசானி புயல் எதிரொலி.. சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை ரத்து!

Cyclone Asani Live: அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலைத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆந்திரா,ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தும் அசானி புயல் காரணமாக விசாகப்பட்டிணம், ஹைதரபாத், மும்பை, ஜெய்பூா் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அசானி புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டிணம், ஹைதரபாத், மும்பை, ஜெய்பூா் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக  சென்னை விமான நிலைய ஆணையம் ( Chennai airport authority) தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விமானங்கள் ரத்து பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு  விமான நிறுவனங்கள்  நேற்று மாலையே கொடுத்துவிட்டதால், பயணிகள் விமானநிலையத்திற்கு வந்து அவதிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலத்தை அச்சுறுத்தும் "அசானி" புயல்  காரணமாக  சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கும், காலை  10:40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் 2  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் இன்று காலை 10:40 மணிக்கும், பகல் 1.45 மணிக்கும் சென்னை வரவேண்டிய 2 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏா் ஏசியா விமான நிறுவனம் சென்னையிலிருந்து ஹைதராபாத்,ஜெய்பூா்,மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்கள்,  ஹைதராபாத்,ஜெய்பூா்,மும்பை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 3 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து அசானி புயல் காரணமாக சென்னை விமானநிலையத்திலிருந்து விசாகப்பட்டிணம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அசானி புயல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget