மேலும் அறிய
Advertisement
சென்னைக்கு வந்த சேகுவேரா மகள் - காரணம் என்ன..?
"விமான நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது"
இன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், தென் அமெரிக்கா நாடுகளில், ஒன்றான கியூபாவின் விடுதலை வீரரும் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோரை வரவேற்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மார்க்சிய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் தோழர் டி. கே ரங்கராஜன் ex MP மாநில கட்டுபாட்டு குழு உறுப்பினர் சங்கர் வல்லம் கோபி உள்ளி்ட்டோர். இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ம.தி.மு.க மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர்கள் எல்.சுந்தராஜன், இரா.வேல்முருகன், ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் 3 நாட்கள் தங்கி இருக்கும் அலெய்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, காங்கிரஸ், மதிமுக உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்
சேகுவேரா - லத்தின் நாடு
தென்அமெரிக்க லத்தின் நாடான அர்ஜென்டினாவில், இரண்டாவது பெரிய நகரமான ரோசேரியாவில் எர்னஸ்டோகோரோ சீலியாடீலா தம்பதியர்களின் மூத்த மகனாக 1928 ஜூன் 14ஆம் பிறந்தார் ஷேகுவாரா.
பள்ளி கல்லூரிப் படிப்பை முடித்து மருத்துவரானார். ஆனால் மருத்துவரா அல்லது புரட்சிக்காரரா என்று வந்த போது ஆயுதம் தாங்கிய புரட்சிக் காரரானார்.
பிடல் காஸ்ட்ரோ
1954 காலகட்டத்தில், கெளதமாலாவில் ஏற்பட்ட போராட்டத்தில் பங்கேற்றபோது போராட்டம் திசைமாறியது அப்போது அங்கிருந்த அர்ஜென்டினா தூதரகத்தில் தஞ்சம் அடைந்த போதுதான் ஒரே எண்ணம் உடைய ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டோரை அங்கே சந்தித்தார் சேகுவாரா .
கியூபா
1954 இல் மெக்சிகோவில் புரட்சி படையின் உறுப்பினரானார் கியூபாவில் நடைபெற்று, வந்த பல்ஜென்சிபோ பட்டிஸ்டாவின் எதேச்சாதிகார அரசை அகற்ற பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கிராண்ட்மாவிலிருந்து கியூபா நோக்கி பயணம் செய்தார் இவரின் கடல் பயணத்தில், இவருக்கு ஆஸ்துமா வந்தது மோசமான துப்பாக்கியை பெற்றுக் கொண்டு என்னால் ஒரு நல்ல துப்பாக்கி வீணாக வேண்டாம் என்றார்.
கியூபாவின் கொரில்லா யுத்தத்தில் இரண்டு தலைமைகள் இருந்தன. ஒன்று பிடல் காஸ்ட்ரோ மற்றொன்று சேகுவேரா. ஆனால் எதிரிகளை குழப்பம் வகையில் நாலாவது படையின் மேஜராக சேகுவாரா அறிவிக்கப்பட்டார். இப்போரில் கியூபா புரட்சி வெற்றி பெறுகிறது. விடுதலை அடைந்த புரட்சிகர கியூபா அரசின் குடிமகன் அந்தஸ்து சேகுவேராக்கு வழங்கப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசில் சேகுவேரா கியூபா தேசிய வங்கியின் ஆளுனராகவும் தொழில் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார். அரசு முறைப் பயணமாக 1959 அன்று இந்தியா வந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion