மக்களே உஷார்.. இதெல்லாம் ரூல்ஸ்.. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை..
விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கியது
சீனாவைப் பொறுத்தவரை கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டால், அதனை கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு என குறிப்பிடாமல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என குறிப்பிடுகிறது. இதனால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக காட்டப்படுகிறது. ஆனால், தகன மையங்களில் உடல்கள் நிரம்பி வழிவதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க காரணமே ”ஜீரோ கோவிட்” என்ற நடைமுறையை சீன அரசு நடைமுறைப்படுத்தி மக்களை எந்தவிதமான கட்டுப்பாடுகள் இன்றியும், குறைந்த பட்சம் முகக்கவசம் அணியக் கூட அரசு அறிவுறுத்தாததுதான் காராணம் என கூறப்படுகிறது.
இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்
சீனாவைப்போல், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருமண விழாக்கள், அரசியல் நிகழ்வுகள், சமூகக் கூட்டங்கள் என பொது இடங்களில் மக்கள் தேவையில்லாமல் கூட வேண்டாம் எனவும் சர்வதேச நாடுகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஐஎம்ஏ ( IMA) அறிவுறுத்தியுள்ளது. தற்போது பண்டிகை காலங்களும் நெருங்கி வருவதால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
இதைஅடுத்து, சானிடைசரைக் கொண்டு தொடர்ந்து கைகளைக் கழுவவும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றுவதோடு இல்லாமல், டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இதுதொடர்பாக ஐஎம்ஏ ( IMA) ஆலோசனை நடத்தியது. அப்போது கூறியிருப்பதாவது, தற்போதைய நிலையை பற்றி மக்கள் கவலை அடையத் தேவையில்லை என்றும், தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது அந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தாதது என்றும் ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.