உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கிவிட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
’’செங்கல்பட்டு மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை திறப்பது குறித்து இனிமேல் பேசலாம் என்கின்ற முடிவிற்கு ஒன்றிய அரசு முன்வந்துள்ளது’’
கொரோனா வைரஸ் தொற்று உலகை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது அமெரிக்கா ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 ஆயிரம் நபர்களுக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா வைரஸ் சுமார் 80 ஆயிரம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 40 ஆயிரம் பேருக்கும் ரஷ்யாவில் 40ஆயிரம் பேருக்கும் சிங்கப்பூரில் 30000 பேருக்கும் தொற்று பதிவாகி உள்ளது. சீனாவில் நேற்றிலிருந்து மீண்டும் பொது முடக்கம் விமானங்களுக்கு தடை பள்ளிகளுக்கு விடுமுறை என பல்வேறு வகையிலான விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. ரஷ்யாவில் மட்டும் நேற்று மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே வைரஸ் தொற்று உலகை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது எனவே நாம் பண்டிகையை கொண்டாடுங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று குறிப்பாக இந்தியாவில் மேற்கு வங்காளம் அசாம் போன்ற மாநிலங்களில் துர்கா பூஜைக்கு பிறகு நோய் தொற்று இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை திறப்பது குறித்து இனிமேல் பேசலாம் என்கின்ற முடிவிற்கு ஒன்றிய அரசு முன்வந்துள்ளது விரைவில் அந்த இரண்டு தொழிற்சாலைகளும் திறப்பது குறித்து விதிமுறைகளுக்கு உட்பட்டு பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிதாக தமிழகத்தில் திறக்கப்பட உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பாண்டு தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் ஒன்றிய அரசிடம் வைத்தார் எதிரொலியாக முதல் தவணையாக 850 மாணவர்கள் அனுமதி அளித்தார்கள் அதன் பிறகு இறுதியாக 1450 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்