மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
செல்போனை பறிக்க முயன்ற இளைஞர்களை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த மாணவிகள்
மாணவியிடம் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு வாகனத்தில் ஏற முயன்றனர். அப்பொழுது இரண்டு கல்லூரி மாணவிகளும் கூச்சலிட்டு இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்று கீழே தள்ளி ஒருவரைப் மடக்கி பிடித்தனர்
சாலையில் சென்ற மாணவிகளிடம் செல்போன் பறித்து தப்பி செல்ல முயன்ற திருடர்களை விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த கல்லூரி மாணவிகள்.
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 18-வது தெருவை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி இவர் தனது தோழியுடன் பெரம்பூர் லோகோ ஸ்கீம் இரண்டாவது தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மாணவியிடம் இருந்த 14,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பிடுங்கிக் கொண்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றனர். அப்பொழுது இரண்டு கல்லூரி மாணவிகளும் கூச்சலிட்டு இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்று கீழே தள்ளி ஒருவரைப் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து ஓடி விட்டார் இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக் வயது 25 என்பதும் அவர் உடன் வந்த நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது 25 என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சூர்யாவையும் கைது செய்த பெரவள்ளூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெளி மாநிலங்களிலிருந்து போதை மாத்திரை வாங்கி , இசை நிகழ்ச்சிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்த கும்பல் கைது.
சென்னையில் தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்யும் கும்பல் குறித்த தகவல்கள் எம்.கே.பி நகர் போலீசாருக்கு கிடைக்கப் பெற்றன. அதன் அடிப்படையில் எம்.கே.பி நகர் போலீசார் போதைப் பொருட்கள் கை மாறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி கல்லுக்கடை சந்திப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் புளியந்தோப்பு ஆசீர்வாதம் 2 வது தெரு பகுதியைச் சேர்ந்த கல்வி அரசு வயது 28 என்பதும் இவர் பார்ட்டிகளுக்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தும் டி.ஜே வாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இவரிடமிருந்து 4 போதை மாத்திரைகள் ஒரு ஸ்டாண்ட் வடிவிலான போதை பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இவருக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்த கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கபீர் அஹமத் 26 மற்றும் அவரது தம்பி ரியாஸ் அகமது 23 ஆகிய இருவரையும் எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி அதனை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கல்வி அரசிடம் கொடுத்து வந்துள்ளனர். கல்வி அரசு அதனை தான் செல்லும் இசை நிகழ்ச்சிகளுக்கு கொண்டு சென்று அங்கு நபர்களுக்கு அதனை கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion