மேலும் அறிய
Advertisement
கடலூரில் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - ஆட்சியர் உத்தரவு
’’விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது’’
விநாயகர் சதர்த்தி பண்டிகையை கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணம் காட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொண்டாட தடை விதித்தனர் இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியினை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்க மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வாறு உள்ள சூழலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களுக்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மேலும் மத சார்பான ஊர்வலங்கள், திரு விழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழாவாக மக்கள் கூடி கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை மக்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இந்த விழாக்களை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு அறிவறுத்தப்பட்டுள்ளது. இதை காவல்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கண்காணித்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை வணிகர்கள் தவிர்க்க வேண்டும். மேலும், அவ்வப்போது கடைகளில் சோதனை மேற்கொள்வது மற்றும் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். ஆட்சியரின் இந்த முடிவானது வரவேற்புக்குரியது என்றாலும் மக்கள் அதனை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதனை அறிந்து விதிமுறைகளை மீறாமல், தனி நபராகவே மட்டுமே சென்று நீர்நிலைகளில் கரைக்க வேண்டும், ஆனாலும் இந்த உத்தரவினால் பல்வேறு மக்களும் ஒரே சமயத்தில் கடற்கரை அல்லது வேறு ஏதேனும் நீர்நிலைகளில் ஒன்றாக கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion