Electrocution: பரிதாபம்! லேப்டாப்க்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் மரணம்!
Doctor Saraneetha: பயிற்சிக்காக சென்னை வந்த கோவையைச் சேர்ந்த மருத்துவர் சரணிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த மருத்துவர், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருத்துவர்:
கோவையைச் சேர்ந்த மருத்துவரான சரணிதா, கோவை மருத்துவ கல்லூரியில் எம்.டி. சைக்காட்ரிக் பிரிவில் கடைசி ஆண்டு படித்து வருகிறார். இவர், பயிற்சிக்காக சென்னை வந்திருக்கிறார். இவர், சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார். இவர் விடுதியில் இருந்த போது, லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மருத்துவர் சரணிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி சரணிதா, லேப்டாப் சார்ஜரை பிடித்தவாறு இறந்து கிடந்தார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். இவருக்கு , 6 வயதில் மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் விசாரணை:
இதையடுத்து, மருத்துவர் சரணிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து, உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர் மரணம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி / குன்னூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்றும், கொரோனா தொற்றுகளின் போது, நீலகிரி மாவட்டத்தில் தீவிரமாக மக்களுக்காக பணியாற்றினார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
மொபைல் சார்ஜ் செய்யும் போது, லேப்டாப் சார்ஜ் செய்யும் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது முதல்முறை இல்லை. பல இடங்களில் இது போன்ற தொடர்ந்து நடைபெறுவதை பார்க்க முடிகிறது. எனவே சார்ஜ் செய்யும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
Also Read: Mobile Charge: மொபைல் சார்ஜ்ஜின் போது தீ விபத்து! பரிதாபமாக பறிபோன 4 குழந்தைகள் உயிர்!