Chess olympiad: செஸ் ஒலிம்பியாட் மயமான சென்னை மெட்ரோ இரயில்... சதுரங்க ஓட்டம் தொடக்கம்!
Chess olympiad: செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் மெட்ரோ ரயில்...
தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இருப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு மாவட்டங்களில் மரம் நடுதல், மாரத்தான் உள்ளிட்டவைகள் மூலம் பொதுமக்களிடம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைநகர் சென்னையில், மெட்ரோ ரயில்களில் 44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து ஸ்டிக்கருடன் வலம் வருகிறது.
#CMMKSTALIN | #TNDIPR | #ChessOlympiad2022 @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @chennaichess22 pic.twitter.com/VERdKgegub
— TN DIPR (@TNDIPRNEWS) July 20, 2022
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், புகழ்பெற்ற நேப்பியர் பாலம் சதுரங்கம் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
சென்னையில் வரும் ஜூலை 28- ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டிஆர் பாலு, திருமதி கனிமொழி மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்