மேலும் அறிய

Chess Olympiad : அதிவேக 5ஜி இன்டர்நெட்.. 2000 சிம்கார்டுகள்... வெளிநாட்டு வீரர்களுக்காக ஏற்பாடுகள் தயார் அமைச்சர் தகவல்..

இறுதி கட்டப் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது வருகின்ற 29ஆம் தேதி துவங்கி , ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.இதனால் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் விமானம் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததை ஒட்டி, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இறுதி கட்டமாக நடைபெறும் ஒரு சில பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். 

Chess Olympiad : அதிவேக 5ஜி இன்டர்நெட்.. 2000 சிம்கார்டுகள்... வெளிநாட்டு வீரர்களுக்காக ஏற்பாடுகள் தயார் அமைச்சர் தகவல்..
 
இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த  அமைச்சர் கூறுகையில , செஸ் போட்டிக்காக  அரங்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களுக்காக அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கு தேவையான சிம்கார்டுகளை போட்டி நடைபெறும் இடத்திலே, முகாம் அமைக்கப்பட்டு சிம்கார்டுகள் தேவைப்படுவதற்கு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .
 
Chess Olympiad : அதிவேக 5ஜி இன்டர்நெட்.. 2000 சிம்கார்டுகள்... வெளிநாட்டு வீரர்களுக்காக ஏற்பாடுகள் தயார் அமைச்சர் தகவல்..
இதற்காக சுமார் 2000 சிம் கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் அதிவேக 5ஜி இன்டர்நெட் சேவையும் கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.இதே போல நாளை மாலை ஒலிம்பியாட் சுடரானது இந்தியா முழுவதும் உள்ள 75 முக்கிய நகரங்களுக்கு சென்று விட்டு, மாமல்லபுரம் வரவுள்ளது. ஒலிம்பியாட் சுடருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :
 
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே, வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget