Chennai Wonderla: சென்னை வொண்டர்லா: டிசம்பரில் திறப்பு! இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர், எத்தனை சவாரிகள்?
Chennai Wonderla Amusement Park : சென்னையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Thiruporur Chennai Wonderla Theme Park: "செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா வருகின்ற டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது"
பொழுதுபோக்கு பூங்காக்கள் (Amusement Park)
குழந்தைகளுக்கு பிடித்த இடம் என்பது பொழுதுபோக்கு பூங்காக்கள் தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பொழுதுபோக்கு பூங்காக்களை விரும்பும் முக்கிய தேர்வாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இயங்கி வரும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு பொதுமக்களின் வரவேற்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விடுமுறை நாட்கள், கோடைகாலம் தொடர் விடுமுறை நாட்கள் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தினமும் படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பொழுதுபோக்கு பூங்காவில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வருகின்றனர்.
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா - Wonderla Amusement Park
அந்த வகையில் இந்தியாவில் முன்னணி, பொழுதுபோக்கு பூங்கா நிறுவனமாக "வொண்டர்லா" இருந்து வருகிறது. வொண்டர்லா பொழுதுபோக்கு நிறுவனம் இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. வொண்டர்லா பூங்கா நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்படவில்லை என்றாலும், பெங்களூரில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தமிழ்நாட்டிலிருந்து இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர்.
சென்னையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா - Chennai Wonderla Amusement park
நீண்டகாலமாக சென்னையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை அமைக்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR Road) திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் ரோலர் கோஸ்டர் அமைய உள்ளது. லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று, பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைய உள்ளது. சென்னை வொண்டர்லா ரோலர் கோஸ்டர் சுமார் என்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.
இடம்பெறும் சவாரிகள் என்னென்ன ? What are the Rides ?
சென்னையில் அமைய உள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் மொத்தம் 42 சவாரிகள் (42 Rides) இடம் பெற உள்ளன. இவற்றில் 16 சவாரிகள் நீர் சவாரிகளாக ( water rides) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக தனியாக குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக 10 சவாரிகள் (children's Rides) இடம் பெற உள்ளன. மொத்தம் 52 சவாரிகள் (52 Rides) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஷன் இன்டர்செல்லர், ரோலர் போஸ்டர், வை-ஸ்கீம், ஒண்டர்லா பம்ப், பைரேட் ஷிப் உள்ளிட்ட சவாரிகள் இடம் பெற உள்ளன.
பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா எப்போது? Chennai Wonderla Theme Park Opening Date
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா பணிகள் தற்போது 70 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு தொடர் விடுமுறை டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர், அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





















