Chennai Powercut : முக்கிய பகுதிகளில் மின்தடை.. சென்னையில் இன்று எங்கெல்லாம் "பவர்கட்" ? - முழு விபரம்
Chennai Powercut : சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூலை 18 ஆம் தேதி சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
"படையப்பா படத்துல 2 இன்டர்வெல் விடலாம்னு ரஜினி சொன்னார்", சீக்ரட்ஸ் பகிரும் கே.எஸ்.ரவிக்குமார்!
தியாகராயநகர்:
தியாகராயநகர் பகுதியில் உஸ்மான் சாலை, பசுல்லா சாலை, பார்த்தசாரதி புரம், காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, ரெயில்வே பார்டர் சாலை, ஸ்டேசன் வியூ சாலை ஆகிய பகுதிகள்.
மூளை அறுவை சிகிச்சை.. பக்கவாதம்.. கடந்து வந்த பாதை குறித்து பேசிய 'கேம் ஆஃப் தோர்ன்ஸ்' நாயகி!
தாம்பரம்:
தாம்பரம் பகுதியில் பெரும்பாக்கம், கைலாஷ், ஸ்ரீபெருமாள் நகர், பஜனை கோவில் தெரு, நூகம்பாளையம் மெயின் ரோடு ஆகிய இடங்கள்.
ரூ. 1 கோடி கொடுங்க..4 வயது சிறுவனை கடத்திய கும்பல் - ஸ்கெட்ச் போட்டு கைது செய்த போலீஸ்!
அடையாறு:
அடையாறு பகுதிக்குட்பட்ட வேளச்சேரி, மகேந்திரா ஷோ ரூம், ராதா பிளாட்ஸ், பிரசாந்த் ஆஸ்பத்திரி, வேளச்சேரி மெயின் ரோடு, கந்த சாவை, சோழமண்டபம், பம்மல் நல்ல தம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, பாரதிநகர் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளை விரைந்து முடிக்குமாறும், சிரமத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: World emoji day: உணர்வுகளைச் சொல்ல வார்த்தை எதற்கு? ஈமோஜி போதுமே.. உலக ஈமோஜி தினம் இன்று!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்