மேலும் அறிய

World emoji day: உணர்வுகளைச் சொல்ல வார்த்தை எதற்கு? ஈமோஜி போதுமே.. உலக ஈமோஜி தினம் இன்று!

உலக ஈமோஜி தினம் இன்று! வரைபடங்களின் விளக்கமாக வார்த்தைகளும்; வார்த்தைகளின் சுருக்கமாக ஈமோஜிகளும் இன்று பயன்படுகின்றன.தகவல் பரிமாற்ற நேரத்தை குறைத்து வேலையை எளிதாக்கி விடுகின்றன எமோஜிகள். 

உலக ஈமோஜி தினம் இன்று!

இன்று மொபைல் குறுஞ்செய்திகளில் வார்த்தைகளின் எண்ணிக்கையை விட ஈமோஜிகள் தான் அதிகம் இடம் பெறுகின்றன. வார்த்தைகளால் வெறும் செய்தியை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஈமோஜிகள் வழியே உணர்வுகளையும் பதிவு செய்யலாம்.சிரிப்பு, அழுகை, கொண்டாட்டம், பணிவு, பாராட்டு, வணக்கம், நன்றி என அனைத்திற்குமே ஈமோஜிகள் உள்ளன.ஒவ்வொரு வகைச் சிரிப்பிற்கும் தனித்தனி ஈமோஜிகள் இருக்கின்றன.

ஈமோஜிகளின் வரலாறு :


World emoji day: உணர்வுகளைச் சொல்ல வார்த்தை எதற்கு? ஈமோஜி போதுமே.. உலக ஈமோஜி தினம் இன்று!
இன்டர்நெட் உலகில் கொடி கட்டி பறக்கும் ஈமோஜிகள், தோற்றுவித்த இடம் ஜப்பான். சிகேடகா குரிடா என்ற டிசைனர் தான் ஈமோஜிகளை உருவாக்கினார். ஜப்பானை சேர்ந்த மொபைல் கம்பெனியான என் டி டி டொகோமோ கம்பெனி தான், இதனை முதன்முதலில் வெளியிட்டது. முதலில் முக பாவனைகளை மட்டுமே ஈமோஜிகள் மூலம் அறிமுகம் செய்திந்திருந்த நிலையில், தற்போது நவீன கால தொழில்நுட்பம் மற்றும் நாகரிக வளர்ச்சிக்கேற்ப விலங்குகள், பழங்கள், பொருட்கள் என அனைத்திற்கும் ஈமோஜிகள் வந்துவிட்டது. ஆப்பிள்,ஆண்ட்ராய்டு என ஒவ்வொரு நிறுவனங்களும் ஈமோஜி அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.சமீபத்தில் ஆப்பிள் அப்டேட்டில் ஆண்கள் கர்ப்பமானதை போல் ஈமோஜி ஒன்று வெளியிடப்பட்டு வைரலாகி இருந்தது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. 2021 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பின்படி மொத்தம்  3,633 ஈமோஜிகள் இருக்கின்றன.

வார்த்தையா? ஈமோஜியா?


World emoji day: உணர்வுகளைச் சொல்ல வார்த்தை எதற்கு? ஈமோஜி போதுமே.. உலக ஈமோஜி தினம் இன்று!

ஒரு சிச்சுவேசனுக்கு ஏற்ப நான் சிரிக்கிறேன் நான் அழுகிறேன் என்று நம் உணர்வுகளை கூறுவதற்கு வார்த்தைகள் கிடையாது. ஆனால் தற்போது ஒரே ஒரு ஈமோஜியில் நம் உணர்வுகளை பிறருக்குச் சொல்லிவிடலாம்.  ஆதிகால மனிதன் வரைபடங்கள் வாயிலாக தான் தகவல்களை பரிமாறிக் கொண்டான்.‌ இன்று மீண்டும் அதே நிலை திரும்பியுள்ளது.எனினும் ஈமோஜிகள் வார்த்தைகளை மிஞ்சி விடுமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. இரண்டிற்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன. ஜப்பானிய மொழியில் எழுத்து மற்றும் படம் ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலவையே ஈமோஜி என்ற வார்த்தை. ஆக வார்த்தையா? ஈமோஜியா? என்ற குழப்பம் தேவையே இல்லை. இரண்டும் ஒன்று சேர்ந்ததே ஈமோஜி. வரைபடங்களின் விளக்கமாக வார்த்தைகளும்; வார்த்தைகளின் சுருக்கமாக ஈமோஜிகளும் இன்று பயன்படுகின்றன.

இன்று காதல் ஜோடிகள், நண்பர்கள் ஏன் அலுவலக வாட்ஸப் சேட்களில் கூட இமோஜிகள் தான் வலம் வருகின்றன. வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த தயங்கும் சில உணர்வுகளை ஈமோஜிகள் மூலம் மக்கள் மிகச் சுலபமாக சொல்லி விடுகின்றனர். இந்த ஈமோஜிகள் மூலம் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடிகள் அதிகம். இன்றைய பரபரப்பான உலகத்தில் நேரம் என்பது மிகப்பெரிய பொக்கிஷம். அந்த நேரத்தைக் காக்கும் வகையில், தகவல் பரிமாற்ற நேரத்தை குறைத்து வேலையை எளிதாக்கி விடுகின்றன ஈமோஜிகள். 

தலைப்பு செய்திகள்

Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Saudi Arabia Vs Houthis: சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
Russia Vs Ukraine: உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!
உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Embed widget