மேலும் அறிய

Chennai Temperature: ஆறு ஆண்டுகளில் இல்லாத வெயில்.. சென்னையில் நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்..! வாடும் மக்கள்..!

Chennai Temperature: சென்னையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரென்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

சென்னையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அதிகபட்சமாக 109 டிகிரி ஃபாரென்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

வாட்டி வதைக்கும் வெயில்:

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் வெப்பல் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. சென்னை, கடலூர்,ஈரோடு, கரூர், பரமத்தி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை சதம் அடித்தது.

சென்னையில் நேற்று  (16.05.2023) 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவு வெப்பம் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தை நோக்கி கடல் காற்று வீசுவது தாமதமாகி வருதால் அனல் அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு சென்னையில் வெயில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டி கொளுத்திய நிலையில், இந்த ஆண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களில் அதிகபட்ச வெப்பம் மேலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

கற்றாழை:

அன்றைக்கு வீட்டு வைத்தியத்தில் இடம்பெற்ற ஒரு மருத்துவக் குணமுள்ள குறுச்செடி, இன்றைக்கு பெரிய லாபம் ஈட்டும் வியாபார பொருளாகிவிட்டது. கற்றாழைச் செடி கிடைக்காதாவர்கள், அதிலிருந்து உணவு தயாரிக்க நேரம் இல்லாதவர்கள் கடைகளில் இருக்கும் க்ரீம்கள், கற்றாழை ஜூஸ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

கற்றாழை மோர்:

பொதுவாக கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதில் ஜூஸ் தயாரித்து பருகலாம். மசாலா மோர் உடன் கற்றாழையை சேர்த்து அரைத்தால் ‘கற்றாழை மோர்’ ரெடி! இதுமட்டுமின்றி நீங்கள் கற்றாழையில் சாம்பார், காரக்குழம்பு, சப்ஜி செய்யலாம். கற்றாழையை மசாலா கலந்த ஒன்றாட சாப்பிட விரும்புவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உணவு முறைகளில் மாற்றம் செய்வதுபோலவே, சரும பராமரிப்பிற்கும் கற்றாழையை பயன்படுத்தலாம்.

கற்றாழையும் சரும் பரமாரிப்பும்

கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்டரைசர். இதன் காரணமாகவே அழகுசாதன பொருட்களில் அதிகளவில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. சன் ஸ்கிரீன், லோசன் உள்ளிட்டவைகளில் கற்றாழை பயன்படுத்தப்படுத்தபடுகிறது. சரும பராமரிப்பில் கற்றாழையில் முக்கியத்துவம் வாய்ந்தது. சருமத்தை ஈரப்பத்தத்துடன் வைத்துகொள்ள உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கற்றாழை அலர்ஜி தரக்கூடியது என்பதால் தேவையெனில் மருத்துவரை அணுகுவது நல்லது.

கோடையில் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சூரிய கதிர்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு கற்றாழை  பயன்படும். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள தண்ணீர் சத்து சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்கள்:

கற்றாழையில் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதன் காரணமாக அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் மனித உடலை சேதப்படாமல் பாதுகாக்க உதவுகின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன.

கற்றாழை தோல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. கற்றாழையின் பல நன்மைகள் தோலுடன் தொடர்புடையவை. அதிகளவிலான ஆண்டி-ஆக்ஸிடன்ஸ் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Embed widget