ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் உயிரிழப்பு...! பஸ் டிரைவருக்கு அடி உதை...!
சுடர்ஒளி விபத்துக்கு காரணமாக டிரைவர் தான் என நினைத்த அவருடைய நண்பர்கள் டிரைவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சுடர் ஒளி (21) இவர் தனது நண்பர்களுடன் நந்தம்பாக்கத்தில் கானா பாடல்களை பாடி விட்டு, இருசக்கர வாகனத்தில் பம்மல் நோக்கி சென்றனர். அப்போது பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த போது கார் மீது இடித்து சென்னையில் இருந்து, திருச்சி சென்ற ஆம்னி பஸ் சக்கரத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சுடர் ஒளியை அவருடன் வந்த நண்பர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பரங்கிமலை போக்குவர்த்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் நடராஜன் (53) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த படம் பிடிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோரை சுடர் ஒளி நண்பர்கள் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளம் கானா பாடகரான சுடரொளி பாடல்களை பாடி விட்டு தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் பம்பல் நோக்கி வந்துள்ளார். பம்மல் நோக்கி சென்றனர். அப்போது பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த போது கார் மீது இடித்து சென்னையில் இருந்து, திருச்சி சென்ற ஆம்னி பஸ் சக்கரத்தில் விழுந்துள்ளார். சுடர் ஒளியுடன் வந்த நண்பர்கள் சிலர் உடனடியாக அவரை மீட்டு சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சுடரொளி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சுடர்ஒளி விபத்துக்கு காரணமாக டிரைவர் தான் என நினைத்த அவருடைய நண்பர்கள் டிரைவரை சரமாரியாக தாக்கி உள்ளனர் இதுகுறித்து தற்போது விசாரித்து வருகிறோம். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் சுடர்ஒளியின் நண்பர்கள் தாக்கியதாக புகார் வந்துள்ளது அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்