Chennai Rains: விடாது விரட்டும் மழை! சென்னையில் கொட்டித் தீர்த்த 20 செ.மீட்டர் மழை - எந்த ஏரியாவில்?
சென்னையில் கனமழை காரணமாக பல பகுதிகளிலும் மழை நீர் கொட்டித் தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால் சென்னையில் பல இடங்களில் மழை கொட்டித் தீர்க்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்திருந்தது.
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை:
வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையின்படி, சென்னை முழுவதும் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் எந்த பகுதியில் எந்தளவு மழை பெய்துள்ளது என்ற தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN -significant rainfall amounts from 08:30 IST to 15:00 IST of 15.10.2024: pic.twitter.com/y3ZSrDcbBH
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2024
சென்னையைப் பொறுத்தமட்டில் மணலியில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. மணலியைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 20 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையிலே குறைந்தபட்சமாக ஆலந்தூரில் 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எந்தளவு மழை பதிவாகியுள்ளது என்பதை கீழே காணலாம்.
- மணலி புதுநகர் – 19.92 செ.மீட்டர்
- பெரம்பூர் - 18.72 செ.மீட்டர்
- கொளத்தூர் - 18.72 செ.மீட்டர்
- அயப்பாக்கம் - 18.36 செ.மீட்டர்
- கத்திவாக்கம் - 18.09 செ.மீட்டர்
- அண்ணாநகர்(மே) – 16.89 செ.மீட்டர்
- வேளச்சேரி - 15.75 செ.மீட்டர்
- புழல் - 15.45 செ.மீட்டர்
- அம்பத்தூர் - 15.21 செ.மீட்டர்
- திருவொற்றியூர் - 14.94 செ.மீட்டர்
- மணலி -14.91 செ.மீட்டர்
- மாதவரம் - 13.74 செ.மீட்டர்
- பேசின் ப்ரிட்ஜ் - 13.65 செ.மீட்டர்
- தண்டையார்பேட்டை – 13.50 செ.மீட்டர்
- அமைந்தகரை - 13.11 செ.மீட்டர்
- மதுரவாயல் - 11.55 செ.மீட்டர்
- வடபழனி - 11.43 செ.மீட்டர்
- நுங்கம்பாக்கம் - 10.41 செ.மீட்டர்
- வளசரவாக்கம் - 10.35 செ.மீட்டர்
- மீனம்பாக்கம் -10.28 செ.மீட்டர்
- ஐஸ் ஹவுஸ் - 10.14 செ.மீட்டர்
- சென்ட்ரல் - 9.84 செ.மீட்டர்
- முகலிவாக்கம் -9.75 செ.மீட்டர்
- உத்தண்டி -9 செ.மீட்டர்
- பெருங்குடி - 8.62 செ.மீட்டர்
- சோழிங்கநல்லூர் - 8.52 செ.மீட்டர்
- ஆர்.ஏ.புரம் - 8.1 செ.மீட்டர்
- அடையாறு - 7.98 செ.மீட்டர்
- மடிப்பாக்கம் - 7.56 செ.மீட்டர்
- ஆலந்தூர் - 2.97 செ.மீட்டர்