Chennai Rains: சென்னையை விடாது துரத்தும் அடாத மழை... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
24 மணி நேரத்தில் பதிவான மழையளவு [மி. மீ] pic.twitter.com/zvYJkyg7Rp
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 5, 2022
Weather forecast for next 7 days-Chennai pic.twitter.com/nMwTbFU1YX
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 5, 2022
இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 5) முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 5, 2022
இந்தநிலையில், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை,ஜாபர்கான் பேட்டை, அசோக் பில்லர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இன்றைய நாளில் பதிவான வெப்பநிலை :
05/07/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/ccqN1qwPLK
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 5, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்