Chennai Rain : விடாம தொடருதே.. சென்னையில் அடித்து வெளுக்கத்தொடங்கிய கனமழை.. இந்த பகுதி மக்கள் உஷார்..
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் மதியம் வெயில் அடித்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் மழை பெய்யும் இடங்கள்:
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கிண்டி, மாம்பலம், பெரம்பூர், பொன்னேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், திருப்போரூர், திருவொற்றியூர், வண்டலூர, மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-10-18:08:41 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மயிலாப்பூர்,புரசைவாக்கம்,சோழிங்கநல்லூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/1fWKSm6yOG
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 10, 2022
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-10-18:07:43 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கிண்டி,மாம்பலம்,பெரம்பூர்,பொன்னேரி,சோழிங்கநல்லூர்,தாம்பரம்,திருப்போரூர்,திருவொற்றியூர்,வண்டலூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/gK2LfeD8ch
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 10, 2022
மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர்,மாதவரம் கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, பூவிருந்தவல்லி, குன்றத்தூர், திருவள்ளூர்,ஊத்துக்கோட்டை, வாலாஜாபாத்,ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சென்னையை நெருங்கும் மழை மேகங்கள் pic.twitter.com/VVvrDgqBjQ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 10, 2022
ஆகையால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிற்க்கு செல்லவும், வெளியே செல்ல கூடிய சந்தர்ப்பம் ஏற்படுமாயின், மழையிலிருந்து தற்காத்து கொள்ள கொடை மற்றும் ரெயின் கோர்ட்டுடன் செல்லவும்.
வானிலை நிலவரம்:
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10- 12 தேதிகளில் நகரக்கூடும்.
இதன் காரணமாக
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.