(Source: ECI/ABP News/ABP Majha)
TN Rain: சென்னையில் திடீரென சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை.. மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாலையில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் மாலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாகவே பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், ஆலந்தூர், அசோக் நகர், எழும்பூர், ராயப்பேட்டை, காசிமேடு, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
11.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.06.2023 முதல் 14.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
11.06.2023 & 12.06.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
11.06.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 160 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 195 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சௌராஷ்டிரா- கட்ச் கடற்கரை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.06.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 150 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 185 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சௌராஷ்டிரா- கட்ச் கடற்கரை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.