Chennai Power Shutdown: சென்னையில் நாளை(20-06-25) முக்கிய இடங்களில் மின் தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை 20-06-2025 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 20.06.2025
இந்நிலையில், நாளை(20.06.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (19.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
வேளச்சேரி:
பைபாஸ் 100 அடி ரோடு லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, ராஜு காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 2வது தெரு, புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தேல் அவென்யூ, முத்துகிருஷ்ணன் தெரு.
தாம்பரம்:
இரும்பிலியூர் சுந்தானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதி புரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலினெல்லையப்பர் தெரு, அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.
அடையாறு:
பெசன்ட் நகர் கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, கடற்கரை சாலை, ருக்குமணி சாலை, அஷ்டலட்சுமி கார்டன், ஓடைக்குப்பம், தீடீர் நகர், கடற்கரை சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, காவேரி தெரு, கொட்டிவாக்கம் கொட்டிவாக்கம் குப்பம், பாலகிருஷ்ணா சாலை 2-வது வார்டு. தெரு, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, 1 முதல் 54வது குறுக்குத் தெரு, ஐஓபி, பகத் சிங் சாலை 1 முதல் 6வது தெரு, ஆர்டிஓ அலுவலகம், ஷிவானி குடியிருப்புகள்.
சோழிங்கநல்லூர்:
சங்கராபுரம், கன்னி கோயில், சீதளபாக்கம் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வெள்ளக்கல், பொன்னியம்மன் காவடி, காந்தி தெரு, நன்மங்கலம் பகுதி.
பல்லாவரம்:
கீழ்கட்டளை ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட் குரூப் ஹவுஸ், லத்தீப் காலனி 1 முதல் 3வது தெரு, காமராஜ் நகர், தர்கா லைன் அண்ட் ரோடு, ரேணுகா நகர், கேஎச் ஹவுசிங், வேம்புலி நகர், என்எஸ்கே நகர், ஜிபி மாதவன் தெரு.






















