மேலும் அறிய
Advertisement
பேண்ட், ஷர்ட் அணிந்திருந்த பெண்ணிடம் போலீஸ் என்று தெரியாமல் வம்பு - கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது
இந்த பையனை எங்கோ பார்த்துள்ளோம் நீ யாரப்பா?’ என்று கேட்டு தோளிலும் கைபோட்டு தொல்லை கொடுத்துள்ளனர்
சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சீருடை அணியாமல், சாதாரணமாக பேன்ட், சட்டை அணிந்து தனது மோட்டார் சைக்கிளில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு உத்தமர் காந்தி சாலை அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் மோர் குடித்து வந்தார்.
அப்போது அங்கு மதுபோதையில் நின்றிருந்த 3 இளைஞர்கள், பின்புறமாக திரும்பி மோர் குடித்து வந்த பெண் உதவி ஆய்வாளர் தோளின் மீது கை போட்டு" இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு" என கூறி உள்ளனர். உடனே திரும்பி தான் பெண் எனவும், காவல் உதவி ஆய்வாளராக இருந்து வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ‘இந்த பையனை எங்கோ பார்த்துள்ளோம் நீ யாரப்பா?’ என்று கேட்டு தோளிலும் கைபோட்டு தொல்லை கொடுத்துள்ளனர். உன்னை நாங்கள் எப்படி நம்புவது என கிண்டலடித்து பேசியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் உதவி ஆய்வாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண் உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்ட செல்வக்குமார் (23), விக்னேஷ் (22), நரேஷ் (20) ஆகிய மூன்று பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பெண் உதவி ஆய்வாளர் மீது மூன்று பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion