மேலும் அறிய

Chennai Metro Rail: விரைவில் சென்னை மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் வசதி!

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் (Dynamic Route Maps) வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (( Chennai Metro Rail Limited) தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்திருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்தக்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிற்கேற்ப பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்போது, சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ வழித்தடங்கள் குறித்த தகவலை வழங்க எல்.இ.டி. ஸ்கிரீன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக Nusyn டிஜிட்டல் சொல்யூசன்ஸ் உடன் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வசதி அடுத்தாண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி

சென்னையில் மெட்ரோ சேவை 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வழித்தடங்களிலும் 600 டிரிப்கள் மேற்கொள்ளப்படுகிறது. கூட்டம் மிகுந்த நேரங்களின் பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க ரயில்களிம் எண்ணிக்கையை 36-இருந்து 46 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயிலில் டைனமிக் ரூட் மேப் ஸ்க்ரீன் முதல் இரண்டு Phase உடன் மற்ற பகுதிகளுகு இயக்கப்படும் மெட்ரோ வழித்தடங்கள் குறித்த தகவல்களும் அடங்கியிருக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. விமானத்தில் பயன்படுத்தப்படும் முறையில் மெட்ரோ ரயிலில் அமைக்கப்பட உள்ளது.

வழித்தடங்களில் முக்கியமான இடங்கள் குறித்த தகவலும் இடம்பெற்றிருக்கும். அதோடு, ஒவ்வொரு ரயிலிலும் இதுபோன்ற 16 மேப்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக,ரயில் செல்லும் வேகம், அதோடு ரயிலுக்கு உள்ளே மற்றும் வெளியே வெப்பநிலை பற்றிய அறிவிப்பு உள்ளிட்டவைகளும் அதில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முழு திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் சலுகை

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கியுள்ள க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.  வாட்ஸ்அப் டிக்கெட் (+91- 83000 86000 ) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பயணிகள் நிறைவடைந்தால் மெட்ரோ இரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

7 நிமிட இடைவெளியில் ரயில் சேவை

அதிகரித்து வரும் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாமல் மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது, 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மழை பெய்யும் நேரங்களில் மக்களின் வசதிக்கு ஏற்ப நெரிசல்மிகு நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget