மேலும் அறிய

Chennai Marina Accident : எமனாக வந்த கடற்படை பேருந்து..! சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்...! மெரினாவில் சோகம்..

மெரினா கடற்கரையில் நடந்த விபத்தில் கடற்படை அதிகாரியின் மனைவியான கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களில் மெரினாவும் ஒன்றாகும். இந்த நிலையில், இன்று இரவு சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள காமராஜர் சாலையில் வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கி வந்தது.

கடற்படை பேருந்து :

இந்த நிலையில், கடற்படை அதிகாரி சிவா ரெட்டி அவரது மனைவி லலிதாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். லலிதா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இவர்கள் இருவரும் பல்லவன் சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, மாநில கல்லூரி அருகே வந்தபோது இவர்களது பின்னால் கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது, அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக சிவா ரெட்டி மற்றும் லலிதா சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அப்போது, லலிதா மற்றும் சிவா ரெட்டி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது, இவர்கள் மீது மோதிய பேருந்து நிற்காமல் தவறி விழுந்த கர்ப்பணிப் பெண் லலிதா மீது ஏறியது.

கர்ப்பிணி பெண் பலி : 

பேருந்து சக்கரத்தில் சிக்கிய லலிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், சிவா ரெட்டி அதிர்ச்சியடைந்தார். அதேசமயத்தில், குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று லலிதாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கியதுடன் பேருந்தை ஓட்டிய ராகேஷ்குமாரையும் தாக்கியுள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராகேஷ்குமாரை கைது செய்தனர். மெரினா கடற்கரையில் ஏற்பட்ட இந்த விபத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
Coastal Cruise Tourism: கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget