தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்
Chennai Rain Alert: அக்டோபர் 1 முதல் இதுவரை 13 செ.மீ வரை மழை பெய்துள்ளது, சராசரி அளவானது 7 செ.மீ ஆகும். இந்நிலையில் வழக்கமான அளவைவிட 84 % அதிகமாக மழை பெய்துள்ளது.
![தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட் Chennai imd head Balachandran press meet today new update about rain alerts today and tomorrow தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/15/37623442c515a7b5c35358736d7f736b1728986978482572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் தெரிவித்ததாவது “ அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை இருக்கும். வடகிழக்கு பருவமழையானது, அக்டோபர் 1 முதல் இதுவரை 13 செ.மீ வரை மழை பெய்துள்ளது, சராசரி அளவானது 7 செ.மீ ஆகும். இந்நிலையில் வழக்கமான அளவைவிட 84 % அதிகமாக மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரெட் அலர்ட் என்றால் 20 செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதாகும்.
சென்னையை பொறுத்தவரை இன்று மாலை , இரவில் மழை அதிகரிக்கும், நாளை காலை அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று:
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை விழுப்புரம். கடலூர், மயிலாடுதுறை திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி திருப்பத்தூர். தர்மபுரி. சேலம். கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை:
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கணமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி, திருப்பந்தார். தர்மபுரி சேலம் திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.192024, வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மனழ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)