மேலும் அறிய

சென்னையில் இதயம், மூளை சிகிச்சை மையம் துவக்கம்.. தொடங்கிவைத்த செஃப் தாமு..

இதய மற்றும் மூளை சிகிச்சை மையத்தை குக் வித் கோமாளி புகழ் செஃப் தாமு துவங்கி வைத்தார்.

சென்னையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையில் இதயம் மற்றும் மூளை ஆராய்ச்சி மையத்தை, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் தலைமையில், பிரபல சமையல் கலை நிபுணர் கே.தாமோதரன் (செஃப் தாமு) துவக்கி வைத்தார். மேம்பட்ட நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் தினேஷ் நாயக், இதய நோய் சிகிச்சை மருத்துவரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் பி.கோபு, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் வர்த்தக பிரிவு தலைவர் பாஸ்கர் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னையில் இதயம், மூளை சிகிச்சை மையம் துவக்கம்.. தொடங்கிவைத்த செஃப் தாமு..
 
விரிவான இதயம் மற்றும் மூளை சிகிச்சை மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர்  கூறியது: எங்கள் மருத்துவமனையில் உயர் தரமான சுகாதாரம் மற்றும் விரிவான சேவையை ஒரே குடையின் கீழ் வழங்குவது முதன்மையான குறிக்கோளாக உள்ளது. இதயம் மற்றும் மூளை பாதிப்பு குறைபாடுகளுக்கு சிறந்த மருத்துவக் குழு மூலம் அனைத்துவித சிகிச்சையும் வழங்கப்படுகிறது. மேலும் நோய் குறைபாடுகளை கண்டறிந்து, சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. குளோபல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை நவீன மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை கொண்டுள்ளது. இத்துடன் வாரிய சான்றளிக்கப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நியூரோ இன்டர்வென்ஷனலிஸ்ட்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், இன்டர்வென்ஷனல் இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் முறையான விதிகளை பின்பற்றி இதயம் மற்றும் மூளை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

சென்னையில் இதயம், மூளை சிகிச்சை மையம் துவக்கம்.. தொடங்கிவைத்த செஃப் தாமு..
 
இந்த சிகிச்சை மையத்தில் தமனியில் ரத்தக் குழாயில் ஏற்படும் ரத்த உறைவை நீக்கும் மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி எனும் அறுவை சிகிச்சை சிறந்த மருத்துவக் குழுவினரால் செய்யும் வசதியைக் கொண்டதாகும். எல்.வி.ஓ. எனப்படும் (லார்ஜ் வெஸல் அக்குலுசன்) மூளைக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய் பாதித்தலில் ஏற்படும் திடீர் பக்கவாதத்திற்கு மேற்கொள்ளப்படும் மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி அறுவை சிகிச்சை மூன்று மாதங்களில் உயிரிழப்பை 17 சதவீதம் குறைக்கிறது. இந்த மையம் தீவிர நரம்பியல் சிகிச்சை பிரிவையும், 24 மணி நேரமும் செயல்படும் தீவிர சிகிச்சை மருத்துவக் காப்பீடு வசதியைக் கொண்டுள்ளது.
 

சென்னையில் இதயம், மூளை சிகிச்சை மையம் துவக்கம்.. தொடங்கிவைத்த செஃப் தாமு..
 மருத்துவமனையின் மேம்பட்ட நரம்பியல் மற்றும் வலிப்பு நோய்க்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் தினேஷ் நாயக் மற்றும் இதய அறிவியல் மையத்தின் தலைவரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் பி.கோபு ஆகியோர் கூறுகையில், “இன்று சுகாதார துறையில் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ள சூழலில், பல சிறப்பு பிரிவுகளை கொண்ட மையத்தில் ஒருங்கிணைந்து நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது. குளோபல் ஹெல்த் சிட்டியின் மேம்பட்ட இதயம் மற்றும் மூளை சிகிச்சை மையத்தில், இதயம் மற்றும் மூளை குறைபாடுகளுக்கு 24 மணி நேரமும் சிறந்த மருத்துவ வல்லுநர்களால் சிகிச்சையளிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்றனர்.
 
நியூரோ சயின்ஸ் மற்றும் முதுகு தண்டுவட குறைபாடு மையத்தின் நரம்பியல் நிபுணர் மூத்த ஆலோசகர் டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில்,  இதயம் மற்றும் மூளை ஆராய்ச்சி மையத்தில் விரிவான ஒருங்கிணைந்த மருத்துவ வலையமைப்பு மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவைகளுக்கு உகந்த கால மேலாண்மையில் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல. மாறாக கிரிப்டேஜெனிக் பக்கவாதம் போன்ற வழக்கத்திற்கு மாறான ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக அமைந்துள்ளது என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget