சென்னையில் தொடர் மழை; வானிலேயே வட்டமடித்த விமானங்கள்.. தரையிறங்க முடியாமல் தவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இன்று மாலை பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருக்கின்றன
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை 3:30 மணியிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை விடியும் மின்னல் சூரை காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த மூன்று உள்நாட்டு விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன.
திருச்சியில் இருந்து 62 பயணிகளுடன் சென்னைக்கு மாலை 3:45 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொச்சியில் இருந்து 127 பயணிகளுடன் மாலை 4.20 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மைசூரில் இருந்து 58 பயணிகளுடன் மாலை 4:40 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மூன்று விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன. மழை மழை தொடர்ந்து நீடித்தால், விமானங்கள் பெங்களூர் அல்லது திருச்சிக்கு திருப்பிவிட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதோடு வானில் பறந்து கொண்டிருந்த மேலும் இரண்டு விமானங்களான வாரணாசி, பாட்னா ஆகிய விமானங்களும் தரையிறங்குகின.
இதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான ஹைதராபாத், டெல்லி, கோவை, மதுரை, கவுகாத்தி, கொல்கத்தா, உள்ளிட்ட 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில், இன்று பகலில் பெய்த, திடீர் மழை காரணமாக 5 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள் மொத்தம் 13 விமானங்கள் தாமதம் ஆகின.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
14.08.2023: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
15.08.2023 (சுதந்திர தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
14.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர்) 14, திரூர் Kvk AWS (திருவள்ளூர்) 12, அம்பத்தூர் (திருவள்ளூர்), ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 11, பூந்தமல்லி (திருவள்ளூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), மதுரவாயல் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), மலர் காலனி (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (காஞ்சிபுரம்) தலா 10, டிஜிபி அலுவலகம் (சென்னை), சென்னை விமான நிலையம் (சென்னை), அடையாறு (சென்னை), ராயபுரம் (சென்னை), டி.வி.கே.நகர் (சென்னை), கொளத்தூர் (சென்னை), ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) தலா 9, திருவள்ளூர் (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை) தலா 8, பெரம்பூர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் ஏஆர்ஜி (காஞ்சிபுரம்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை) தலா 7.