மேலும் அறிய

Chennai: கணவனுடன் பேசிக்கொண்டிருந்த பெண்.. மாடியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழப்பு - சென்னையில் சோகம்

சென்னை, திருமுல்லைவாயில் அருகே மாடியில் கணவனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண் தவறிவிழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பிரவீன்குமார். இவருக்கு வயது 25. இவரது மனைவி அபிராமி. இவருக்கும் வயது 25. இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இவர்கள் ஆவடியை அடுத்து அமைந்துள்ள திருமுல்லைவாயல் அருகே உள்ள வெங்கடாசலம் நகர்2வது தெருவில் வசித்து வருகின்றனர்.

மாடியில் இருந்து தவறிவிழுந்து பலி:

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிய இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் லக்கி என்ற பெண் குழந்தை உள்ளது. பிரவீன்குமாரின் வீடு 2 மாடிகள் கொண்ட வீடாகும். கணவன்- மனைவி இருவரும் இரவு நேரத்தில் மாடியில் அமர்ந்து பேசுவது வழக்கம். அதேபோல, நேற்று முன்தினம் வழக்கம்போல பிரவீன்குமாரும், அபிராமியும் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அபிராமி மாடியின் கைப்பிடியில் அமர்ந்து பிரவீன்குமாருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிமாக அபிராமி தவறி தலைகீழாக கீழே விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடமே ரத்த வெள்ளமானது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அபிராமியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை:

அங்கு அபிராமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இளம்பெண்ணான அபிராமிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு வயது பெண் குழந்தைக்கு தாயான இளம்பெண், மாடியின் கைப்பிடியில் அமர்ந்து இருந்தபோது தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Aishwarya Rajinikanth: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

மேலும் படிக்க:  Accident: பைக் மீது மோதிய கார்; மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அக்கா, தம்பி உயிரிழப்பு - சென்னையில் சோகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Breaking News LIVE: சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்
Breaking News LIVE: சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Breaking News LIVE: சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்
Breaking News LIVE: சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்
Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி  உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!
Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
7 AM Headlines: தமிழ்நாடு முழுவதும் மழை! பிரதமர் மோடிக்கு ராகுல் வைத்த செக் - இன்றைய ஹெட்லைன்ஸ்
7 AM Headlines: தமிழ்நாடு முழுவதும் மழை! பிரதமர் மோடிக்கு ராகுல் வைத்த செக் - இன்றைய ஹெட்லைன்ஸ்
Today Movies in TV, May 16: மன மகிழ்ச்சியை உண்டாக்கும் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?
மன மகிழ்ச்சியை உண்டாக்கும் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?
Embed widget