மேலும் அறிய

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை : இவ்வளவு விகிதம் உயர்வா?

கல்வித்தரம், போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆய்வக வசதிகள் போன்றவை வழங்கப்படுவதாக அதிகாரிகள் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் எடுத்துரைத்தனர்.

மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு சலுகைகள் கிடைக்கப்பெறுவதால் தனியார் பள்ளிகளில் பயின்ற தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். இதனால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளது.

தனியார் பள்ளியின் மீதான ஒருவித பார்வையால் அதிக பணத்தினை கட்டி பிள்ளை படிக்கலேன்னு புலம்பும் பெற்றோர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசுப்பள்ளிகளைக் குறித்த தயக்கம் அதிகம் இருந்தது. அதனை முற்றிலும் மாற்றியது கொரோனா பெருந்தொற்று. ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களுக்கு முறையாக கல்வி கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். இந்த வருடத்திற்கான அனைத்து பள்ளிக்கட்டணத்தினையும் செலுத்தினால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்று கூறி பெற்றோர்களை பணம் கொடுப்பதற்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றனர். இச்சூழலில் பல பெற்றோர் என்ன செய்வது என்று தவித்த நிலையில்தான் சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள்  களம் இறங்கினர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை : இவ்வளவு விகிதம் உயர்வா?

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை:

கொரோனா காலக்கட்டத்தில் பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் இடைநிற்றல் நிலைக்குக் கூட தள்ளப்பட்டனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பள்ளியில் கல்வித்தரம், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயார்ப் படுத்தும் வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆய்வக வசதிகள் போன்றவை வழங்கப்படுவதாக அதிகாரிகள் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசம் எனவும் நல்ல முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என கூறியுள்ளனர்.

இதோடு மட்டுமின்றி,  ஆசிரியர்களும் குழுக்களாக பிரிந்து, இடைநிற்றலில் இருந்த மாணவர்களை அடையாளம் கண்டு, அந்தப்பகுதிகளில் உள்ள பெற்றோர்களிடம் மாநகராட்சி பள்ளிகளின் தரம் குறித்து எடுத்துரைத்தனர். மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த முயற்சியினால் தற்பொழுது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தாண்டு 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் பள்ளியினைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 1,00,300 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை : இவ்வளவு விகிதம் உயர்வா?

சென்னை மாநகராட்சி பள்ளியில் உள்ள வசதிகள்:

சென்னை மாநகராட்சியின் கீழ் 281 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.  மேலும்   ரூ .95 கோடி செலவில் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி மத்திய அரசுடன் கைகோர்த்துள்ளது. எனவே உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டவுடன் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதோடு 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று உயர் கல்வியினை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்க மாநகராட்சி வழிவகுத்துக்கொடுக்கிறது. இதன்படி மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிப்பு முடியும்வரை ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் நிதி உதவி கிடைக்கப்பெறுகிறது. அதேப்போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7 ஆயிரம் நிதி உதவியினை கிடைக்க வழிவகை  செய்யப்பட்டுவருகிறது. இதோடு எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு புத்தகங்கள், பள்ளிக்கட்டணம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை : இவ்வளவு விகிதம் உயர்வா?

இதுப்போன்று பல்வேறு சலுகைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில்தான் பெற்றோற் பலர் உள்ளனர் எனவும், தற்பொழுது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட களப்பணி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தரத்தினை உயர்த்துள்ளதாக அதிகாரிகள் பெருமையுடன் கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget