மேலும் அறிய

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..!

சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புதிய உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஆதிதிராவிட பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ( ஆண்/பெண்) மட்டுமே போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..!

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேலூர் மாநகராட்சி, கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுரைக்குட்பட்ட மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..!

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவால் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆதிதிராவிட பெண் போட்டியாளர்கள் மட்டுமே அனைத்தக்கட்சியிலும் போட்டியிடும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால், சென்னை மாநகராட்சியின் மேயராக உதயநிதி ஸ்டாலின் ஆவார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், இப்போது முதல் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சியின் மேயர் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிற மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களை தயார் செய்யும் பணியிலும் அந்தந்த கட்சித்தலைமை களமிறங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே நடைபெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் மீதம் உள்ள மாநகராட்சிகளான திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, ஓசூர், நாகர்கோயில், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகளில் வழக்கம்போல போட்டியிடுபவர்களே போட்டியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த நிலையில், நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு வரும் 21-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல், ஒமிக்ரான் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Embed widget